கதை திருட்டுல சிக்கிய ஷங்கர்... நடந்த உண்மை இதுதான்!

By :  Sankaran
Update:2025-02-22 12:39 IST

ஷங்கரின் 10 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். இதுவே திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. உண்மையில் நடந்தது என்ன என்று பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு வருகிற பிரச்சனையும் பிரம்மாண்டமாகத்தான் இருக்கு. எந்திரன் படத்தின் கதை என்னுடையதுன்னு சொல்லி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் நீதிமன்றத்துக்குப் போனாரு. இதுதொடர்பான விசாரணைகள் நடந்தது.

இதைத்தாண்டி சமீபகாலமாக ஷங்கருக்கு நெருக்கடிகளும் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. இந்தியன் 2, கேம்சேஞ்சர் படுதோல்வி. இந்தியன் 3க்கு 10 நாள் சூட்டிங் பாக்கி இருக்கு. எடுப்பாங்களான்னு தெரியல. வேள்பாரி 1000 கோடி பட்ஜெட் கதை. இதுக்கு எந்தத் தயாரிப்பாளரும் முன்வரல.

10 கோடி: இவ்வளவு கடுமையான சூழலுக்கு இடையில் ஷங்கருக்கு இன்னொரு பிரச்சனை. அவர் யாருக்கும் இடையூறு செய்யாதவர்தான். தனது கருத்துகளைத் தன் படங்களில் சொல்வார். அவரது சொத்துக்களில் சுமார் 10 கோடி ரூபாய் வரை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. இது பலருக்கும் திகைப்பைத் தருகிறது. உண்மையில் என்ன நடந்தது.



திக் திக் தீபிகா: 2010ல் எந்திரன் திரைக்கு வருகிறது. 2007ல் ஆரூர் தமிழ்நாடன் 'திக் திக் தீபிகா' என்ற பெயரில் நாவலாக வெளியாகிறது. அது எந்திரன் கதையோடு ஒத்துப்போகிறது. அதனால் என் கதைன்னு நீதிமன்றத்துக்குப் போகிறது. அவர் காப்பிரைட் எதுவும் வெளியிடல. காப்பிரைட் சட்டத்தின்படி பிரச்சனை இல்லைன்னு தீர்ப்பு வந்தது.

காப்பிரைட்: தற்போது இது காப்பிரைட் மீறப்பட்டதுன்னு அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. ஷங்கர் ஒரு பிரச்சனையை விட்டுவிட்டால் அது சரியாகும்னு நினைப்பவர். அந்த நேரத்தில் கிட்டத்தட்ட 10 பேர் இது என்னுடைய கதைன்னு சொல்லிட்டு வந்தாங்க. ஷங்கர் அவர்களைப் பேசி அனுப்பிட்டாரு.

ஆரூர் தமிழ்நாடன்: அப்படித்தான் ஆரூர் தமிழ்நாடனும் நீதிமன்றத்துக்குப் போய் இருக்கிறார். அவர் நக்கீரன் பத்திரிகையில் பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். ஷங்கர் எல்லா படத்திற்கும் கதைகளைத் திருடி எடுக்கிறார்னு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே கருத்து இருவருக்கும் வரலாம்.

இந்தியன்: எனது நண்பர் இதயா துக்ளக் இதழில் நிருபராக உள்ளார். 'லஞ்சதந்திர கொலைகள்'னு ஒரு நாவல் எழுதினார். அதன் மையக்கருத்தும், இந்தியன் படத்தின் மையக்கருத்தும் ஒன்றுதான். ஆனால் அவர் ஷங்கர் பெரிய இயக்குனர். அவருக்கும் எனக்குத் தோன்றியது போல கருத்து வந்துருக்கலாம்னு அப்படியே விட்டுட்டாரு.

அவர் அப்படி ஒரு முடிவை எடுத்ததால ஷங்கருக்கும் பிரச்சனை வரல. அந்த மாதிரி இது நடந்ததான்னு கூட நான் பார்க்கிறேன். ஆனா நீதிமன்றம் 2 ஸ்கிரிப்டையும் வச்சிப் பார்த்து பல இடங்களில் ஒற்றுமை இருப்பதாகச் சொல்லி இருக்காங்க. அப்புறம் அதுவே மேல்முறையீடாகி வேறொரு தீர்ப்பா வந்துருக்கு.

வாபஸ் வாங்கணும்: அந்த வகையில் ஷங்கர் அமலாக்கத்துறை என் சொத்துக்களை முடக்கியது தவறானது. நான் நீதிமன்றத்துக்குப் போவேன். உடனடியாக வாபஸ் வாங்கணும்னு சொல்லி இருக்கிறார். இந்த வழக்கு எதை நோக்கிப் போகும்னு தெரியல. எதுவும் தானாக சரியாகி விடும்னு விட்டுட்டா அது மேலும் புரையோடிப் போவதற்குத் தான் வாய்ப்பு இருக்கு. இப்ப கூட ஆரூர் தமிழ்நாடனைக் கூப்பிட்டு பேசித் தீர்த்துக்கலாம்னு நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News