சோனாவுக்கும் தண்ணி காட்டிய வடிவேலு... இது வேற மேட்டாரா இருக்கும் போல

by Rohini |   ( Updated:2025-03-11 16:30:38  )
sona
X

பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா. அந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு தோழியாக நடித்திருப்பார். அந்த படத்தில் ஹீரோயினுக்கு இணையான ஒரு தோற்றத்தில் மிகவும் ஸ்லிம்மாக இருந்தார் சோனா. ஆனால் ஹீரோயின் வாய்ப்பு அவருக்கு வரவே இல்லை. அப்படியே ஹீரோயின் சான்ஸ் கேட்டாலும் அட்ஜெஸ்மெண்ட் என்ற ஒரு போர்வைக்குள் தள்ளப்பட்டார் சோனா.

அதனால் அப்படி ஹீரோயின் ஆவதற்கு கிளாமர் காட்டி கிளாமர் ரோலிலேயே நடித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார் சோனா. அதிலிருந்து கிளாமரான ரோல், ஐட்டம் பாடல் என பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபகாலமாக சோனா அவருடைய வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களையும் மறக்க முடியாத விஷயங்களையும் பேட்டியில் கூறி வருகிறார்.

அவருடைய அப்பா பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக் என்றும் கூறினார் சோனா. அதனால் தன் அம்மாவை விட்டு அவர் பிரிந்தார் என்றும் சோனா கூறினார். அதிலிருந்து ஒரு ஆண்மகன் போல தன் வீட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொண்டேன் என்றும் சோனா அந்தப் பேட்டியில் கூறினார்.

இந்த நிலையில் வடிவேலுவை பற்றியும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் சோனா. குசேலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் சோனா. அந்தப் படத்தை பற்றி பேசும் போது வடிவேலுவை மறந்துடுங்க. ரஜினியுடன் நான். சூப்பர் அனுபவம் என்று கூறினார். ஏன் வடிவேலுவை பற்றி எதுவும் வேண்டாம் என சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவரை பற்றி உலகத்திற்கே தெரியுமே.

அவரை பற்றி யார்கிட்டயாவது கேளுங்க. கழுவி கழுவி ஊற்றுவார்கள். அப்படித்தான் நானும் பேசுவேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன். பிச்சைக் கூட எடுப்பேன். ஆனால் அவருடன் நடிக்கவே மாட்டேன். குசேலன் படத்திற்கு பிறகு அவருடன் நடிக்க 16 படங்களின் வாய்ப்பு வந்தது. ஆனால் என்னால் முடியவே முடியாது என மறுத்துவிட்டேன் என சோனா கூறினார்.

Next Story