விடமாட்டீங்களே… மீண்டும் ஜெயம் ரவி படத்தில் எஸ்கே… ஆனா இது சூப்பர் அப்டேட்…

By :  Akhilan
Update: 2025-02-02 13:17 GMT

Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவியின் படத்தில் மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மற்ற மொழிகள் படங்களில் ஹீரோக்கள் இணைந்து நடிப்பது வழக்கம் தான். ஆனால் தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் நடிகர்கள் இணைந்து நடிப்பது அரிதாக நடிக்கும் விஷயம்தான். ஆனால் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படத்தில் ரவி மோகன் நடிக்க இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் படத்தில் ரவி மோகன் வில்லன் அவதாரம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுவே தற்போது பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் எஸ்கே நடிப்பில் அடுத்தடுத்து படங்களும் தொடர்ச்சியாக உருவாகி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வரும் நிலையில் அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ரவி மோகன் நடித்த ஜனகனமண கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஜனகனமண திரைப்படம் ரவி மோகன் நடிப்பில் கோவிட் காலத்தில் ஏற்கனவே ஷூட்டிங் நடந்து வந்தது. ஆனால் கோவிட் காலத்தில் வெளிநாட்டில் ஷூட்டிங் நடத்த முடியாத நிலையால் படம் நிறுத்தப்பட்டது. பிரம்மாண்டாமாக உருவாகி வந்த படத்தில் ஆக்‌ஷன் சீக்குவன்ஸ் பெரிய அளவில் பேசும் பொருளாக அமையும் எனக் கூறப்படுகிறது.

ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகி வந்த இப்படம் நிறுத்தப்பட்டது. இப்படத்தில் டாப்ஸி, ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், ரஹ்மான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரவி மோகன் நடிப்பில் தற்போது ஏகப்பட்ட படங்கள் உருவாகி வருவதால் கண்டிப்பாக இனி ரவி நடிக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.

இதனால் சிவகார்த்திகேயனுக்கு அஹ்மத் சொல்லிய கதை ஜனகனமண படமாக தான் இருக்கும் என நம்பப்படுகிறது. இப்படத்தில் வேலைகள் விரைவில் தொடங்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News