திமிர் ஜாஸ்தி... கர்வம் சர்ச்சைகளுக்கு சரமாரியாக பதிலடி கொடுத்த இளையராஜா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

By :  Sankaran
Update: 2025-02-02 11:47 GMT

தமிழ்த்திரை உலகம் என்றாலே அதுல தவிர்க்க முடியாத நபர் இசைஞானி இளையராஜா. இவருடைய வருகைக்குப் பிறகு திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக 80களைத் தான் தமிழ் சினிமா உலகின் பொற்காலம் என்று சொல்வார்கள்.

வெள்ளி விழா படங்கள்: அது இசைஞானியின் வருகைக்குப் பிறகு தான் நடந்துள்ளது என்றால் மிகையில்லை. அவரது படங்கள் பாடல்களால் புத்துயிர் பெற்றன. பல நடிகர்களுக்குப் படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. இதெல்லாம் ஒருபுறம் இருக்க இளையராஜா இன்று வரை பிசியாக இருப்பதையும் பார்த்து சிலர் அவருக்குத் தலைக்கனம் ஜாஸ்தின்னு சொல்றாங்க. இதுக்கு நீண்டநாள்களாக பதில் சொல்லாமல் இருந்த இசைஞானி இப்போது வாய் திறந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

இசைஞானி இளையராஜாவைப் பொருத்தவரை அவர் தலைக்கனம் பிடித்தவர். ரொம்ப கோபமானவர். திமிர் ஜாஸ்தி என்றெல்லாம் பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம்.

திமிர் ஜாஸ்தி: அவர் மேடைக்கச்சேரிகளில் கூட யாராவது தவறாகப் பாடினால் உடனடியாகத் திருப்பிப் பாடச் சொல்லித் தவறைச் சுட்டிக் காட்டுவார். அந்த வகையில் அவருக்கு உண்மையிலேயே திமிர் ஜாஸ்தியான்னு பலருக்கும் சந்தேகம் வரும். அதற்கு அவர் என்ன பதில் சொல்லி இருக்காருன்னு பாருங்க.

திருவாசகம் இசை: கர்ப்பமா இருந்த பெண்ணின் வயிற்றில் குழந்தை உணர்ச்சியே இல்லாமல் இருந்தது. என்னோட திருவாசகம் இசையைக் கேட்க விரும்பினாள் தாய். அதைக் கேட்டதும் குழந்தை அசைந்தது. கேரளாவில் மதம் பிடித்த யானை ஒன்று என் பாட்டைக் கேட்டுத் தூங்கி விட்டது.


யானைகள் கூட்டம்: டூரிங் தியேட்டர்ல ராசாத்தி உன்ன என்ற என் பாட்டு ஒலிக்க யானைகள் கூட்டமாக வந்து அமைதியாகக் கேட்டுச் சென்றது. இதெல்லாம் அப்பாற்பட்ட சக்தி. அதுக்காக நான் எனக்கு தலைக்கனம், திமிர் பிடிச்சவன்னு சொல்றாங்க. அது சரி. எனக்கு திமிர் வராம வேற யாருக்கு வரும். உலகத்துல யாருமே செய்யாததை நான் செஞ்சிருக்கேன். எனக்கு வராம வேற யாருக்கு திமிர் வரும்?

யாருக்கு திமிர் ?: என்னைப் பார்த்து ஒருத்தன் திமிர் பிடிச்சவன்னு சொன்னா அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? என்னைக் குற்றம் சாட்டுறவங்க எதுவுமே செய்யாம நான் திமிர் பிடிச்சவன்னு சொன்னா எனக்கு கர்வம் வரத்தான் செய்யும். விஷயம் தெரிஞ்சவனுக்கு கர்வம் இருக்காதா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News