ஏர்போர்ட்ட தவிர அஜித் அடிக்கடி வரும் இடம் இதுதான்! பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்

அஜித்தை அடிக்கடி பார்க்குறதே இங்குதான்.. நடிகர் ஷ்யாம் சொன்ன தகவல்

By :  rohini
Update: 2024-09-21 07:18 GMT

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் அஜித். தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் ஏற்கனவே உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் விடாமுயற்சி ரிலீஸ் ஆகுமா? இல்லை குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகுமா என கோடம்பாக்கத்தில் ஒரு விவாதமே நடந்து கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த இரு படங்களின் மீதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

பொதுவாக அஜித் எந்த ஒரு பொது விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை என அனைவருக்குமே தெரியும். ரசிகர்களை சந்திக்கவும் மாட்டார். பெரும்பாலும் வெளிநாடுகளில் மட்டும்தான் அவர் இருப்பார். அது மட்டுமல்ல அவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறார். என்றால் அது விமான நிலையத்தில் மட்டும்தான்.

ஏர்போர்ட்டில் வரும்போது ரசிகர்கள் அவரை படம் பிடித்து அதை இணையத்தில் வைரலாக்கி வருவதை நாம் நாள்தோறும் பார்த்து வருகிறோம். இப்போது சமீப காலமாக புதுவகை சொகுசு கார்களை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த காருடன் அவர் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் ஷாம் அஜித்தை பற்றி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். ஷாமின் பசங்களும் அஜித் மகள் படிக்கும் பள்ளியில் தான் படிக்கிறார்களாம். அதனால் அஜித்தின் மகள் அனுஷ்கா பள்ளியில் எந்த ஒரு விழாவானாலும் அஜித் தவறாமல் கலந்து கொள்வாராம் .தவற விட மாட்டாராம். எங்கு இருந்தாலும் வந்து விடுவாராம் .

அதனால் அங்கு வரும்போது நான் அடிக்கடி அவரை சந்தித்து இருக்கிறேன். அங்கு மட்டும்தான் அஜித்தை அதிகளவு நான் பார்த்திருக்கிறேன் என ஷியாம் கூறி இருக்கிறார். அது மட்டுமல்ல அவர் அங்கு இருக்கிறார் என்றால் என்னுடைய கூலிங் கிளாஸ் கழட்டி விட்டு அவருக்கு ஒரு மரியாதை கொடுக்கும் விதமாக அவரிடம் போய் பேசுவேன்.

ஏனெனில் இந்த அளவு ஒரு பெரிய ஹீரோவாக இருக்கும் அஜித்தே மிகவும் பணிவாக எளிமையாக இருப்பார் .அவர் முன் வெட்டிப் பந்தா காட்டக் கூடாது என்பதால் நானும் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி விடுவேன். என்னை பார்த்ததும் எப்படி இருக்க எப்படி போகுது என்றெல்லாம் கேட்பார் அஜித் என ஷியாம் கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News