அடுத்த படம் ஆதிக்கா?.. இப்படி ஒரு பஞ்சாயத்து இருக்கு!.. ஏகே என்ன முடிவெடுப்பாரோ!...
aadhik
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதற்கு முன் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பெரிய அளவில் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.
ஆனால் விடா முயற்சி திரைப்படத்தை தான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். படம் நெகட்டிவ் விமர்சனத்தையே பெற்று அஜித் ரசிகர்கள் உட்பட அனைவரையும் ஏமாற்றியது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த படத்தில் இதுவரை இல்லாத வகையில் அஜித் ஒரு புதுமையான நடிப்பை கையாண்டு இருப்பார். அது அஜித் ரசிகர்கள் உட்பட யாருக்குமே பிடிக்கவில்லை.
எப்பொழுதும் அஜித்தை மாஸாக ஒரு ஆக்சன் ஹீரோவாகவே பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் அந்தளவு திருப்தியை கொடுக்கவில்லை. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி என்ற ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த நிலையில் அஜித் ஆதித் காம்போவில் குட்பேட்அக்லி திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.
நினைத்ததை விட பெரிய அளவில் வெற்றியை பெற்றது குட்பேட்அக்லி. அஜித்தின் கேரியரிலும் இந்த படம் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. இந்த நிலையில் அடுத்ததாக அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன்தான் பணியாற்ற போகிறார் என்ற ஒரு தகவல் வெளியானது. அதில் ஒரு சின்ன சிக்கல் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. குட்பேட்அக்லி திரைப்படத்தின் போது ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
aadhik
அதனால் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கினால் அதை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்காது இதுவே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்குமaனால் அந்த படத்தை ஆதிக் இயக்க வாய்ப்பில்லை. அதனால் முடிவு இப்போது அஜித் கையில் தான் இருக்கிறது என சொல்லப்படுகிறது. அதனால் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் அடுத்த படத் தயாரிப்பாளர் யார் என்பதை அவர் ரேஸ் எல்லாம் முடித்துவிட்டு வந்து சொல்ல வேண்டும்.