விடாமுயற்சி ரிலீஸ்!.. அஜித் மனசுல இருந்த அந்த தேதி.. கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையாம்..
Actor Ajith: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று கைவசம் இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கின்றார். இதில் விடாமுயற்சி திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கின்றது.
இப்படத்தை இரண்டு வருடங்களாக ஜவ்வு போல் இழுத்து எடுத்து முடித்து இருக்கிறார்கள். இதற்கு இடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய வேகத்தில் விறுவிறுப்பாக எடுத்து முடிக்கப்பட்டது. இப்படம் தான் முதலில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடாமுயற்சி வர இருந்ததால், திரைப்படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருந்தார்கள். ஆனால் திடீரென்று விடாமுயற்சி திரைப்படம் தற்போது பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகப்போவதில்லை என்கின்ற அறிவிப்பை வெளியிட்டது.
இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குட் பேட் அக்லி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியிட்ட தேதியை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள். அதன்படி குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ்-ஆக இருக்கின்றது.
இந்த திரைப்படம் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியிட்டு தேதியே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்காமல் இருந்து வருகிறார்கள்.
விடாமுயற்சி திரைப்படத்தின் காப்பிரைட்ஸ் தொடர்பான சிக்கல் இன்னும் நீடித்து வருவதால் அந்தப் பிரச்சினை முடிந்த பிறகு தான் படத்தின் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தை வெளியிடுவது குறித்து ஒரு தேதியை ஞாபகத்தில் வைத்திருந்தார். அதாவது ஏப்ரல் 24ஆம் தேதி அவரின் திருமண நாளை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படத்தை வெளியிடலாம் என்று யோசித்து வைத்திருந்தார்.
ஆனால் விடாமுயற்சி படக்குழுவினர் அதற்கு முன்னதாகவே ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனை தெரிந்து கொண்ட நடிகர் அஜித் இந்த தேதி தொடர்பான விஷயத்தை கடைசிவரை கூறாமலேயே இருந்து விட்டாராம்.