எஸ்கே-வின் சினிமா வாழ்க்கையிலேயே இதுதான் ஃபர்ஸ்ட் டைம்... வேர்ல்ட் லெவல்ல பேமஸ்-ஆக போறாரே...!
சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அமரன் திரைப்படம் தான் பல திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி ஒரு முக்கிய இடத்தை அடைந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட்-ஆக தனது கெரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன் தொடர்ந்து விஜய் டிவியில் ஆங்கரிங் செய்து வந்தார். பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு மெரினா திரைப்படம் ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது.
அதைத் தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலமாக பலரும் ரசிக்கும் நடிகராக மாறினார். பின்னர் சினிமாவில் நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கின்றார். தற்போது வரை இவர் நடித்த படங்களில் சில படங்கள் மட்டும்தான் தோல்வியை சந்தித்து இருக்கின்றது. பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கின்றது.
சிவகார்த்திகேயன் தற்போது கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கின்றார் என்று தான் கூற வேண்டும். இவர் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கின்றார். மேலும் கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கின்றது.
இப்படத்தில் மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. சமீப நாட்களாக படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த திரைப்படம் நாளை தீபாவளி அன்று வெளியாக உள்ளது .
இதனால் பட குழுவினர் கடந்த சில நாட்களாக ப்ரமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வந்தனர். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் தமிழகம், ஆந்திரா, கேரளா, ஹைதராபாத் மற்றும் துபாய் போன்ற இடங்களுக்கு சென்று படம் குறித்து பிரமோஷன் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்திருந்ததாவது: 'சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே முதன் முறையாக வேர்ல்ட் வைட் 800 திரைகளில் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இன்னும் திரைகள் அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
இந்த திரைப்படத்தின் இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிபியூட்டர் அதாவது உலகம் முழுவதும் இந்த படத்தை திரையிடுவதற்கு உரிமம் வாங்கி இருக்கும் ஏபி இன்டர்நேஷனல் ஹோம் ஸ்கிரீன் ஓனர் சஞ்சய் வரதராஜன் சார் இந்த திரைப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன்புதான் பார்த்தார். முதலில் படம் பார்க்காமலேயே இந்த திரைப்படத்தின் ரைட்சை அவர் வாங்கி விட்டார்.
பின்னர் நேரம் ஒதுக்கி அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து மிக நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த திரைப்படத்தை நான் வாங்கி ரிலீஸ் செய்கிறேன் என்பதில் மிகப் பெருமைப்படுகிறேன்' என்று கூறியதாக ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்து இருக்கின்றார்.