5 நிமிஷம்... 4 மணி நேரமான தரமான சம்பவம்..! ரஜினி குறித்து அமீர்கான் சொன்ன சூப்பர் தகவல்
சூப்பர்ஸ்டார் என்றாலே அது ரஜினி தான். அதுக்கு யாரும் போட்டி போட முடியாது. அவரைத் தவிர அந்த இடத்தில் யாரையும் பொருத்தியும் பார்க்க முடியாது. அவரோட ஸ்டைல், மேனரிசம், அந்த ஸ்பீடு இந்தியத் திரையுலகிலேயே யாருக்கும் வராது. அது அவருக்கே சொந்தம்.
74வது பிறந்த நாள்
அதனால் தான் யாராலும் சூப்பர்ஸ்டாரின் பட்டத்தைக் கைப்பற்ற முடியவில்லை. அந்த வகையில் இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினி குறித்து பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் என்ன சொல்லி இருக்கிறார்னு பாருங்க.
கூலி
cரஜினியைப் பற்றி அமீர்கான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த சில நாள்களாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. அது முடிந்ததும் சென்னை திரும்புகிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் முடியும் என்று தெரிகிறது.
முதல் முறை
ரஜினியின் படங்களிலேயே வேறு மொழிகளைச் சேர்ந்த நிறைய நடிகர்கள் நடிப்பது இதுவே முதல் முறை. சத்யராஜ், சௌபின் சாகர், உபேந்திரா உள்பட பலர் நடித்து வருகின்றனர். பாலிவுட் பிரபலம் அமீர்கானும் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார். ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் அவரும் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.
அமீர்கான் சொன்ன விஷயம்
சில வருடங்களுக்கு முன் ரஜினி குறித்து அமீர்கான் சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் ஒரு ஓட்டலில் ரஜினி தங்கி இருப்பதை அறிந்த அமீர்கான் அவரை சந்திக்கச் சென்றுள்ளார். அவரைப் பார்த்து 5 நிமிடம் பேசிவிட்டு வரலாம் என்று நினைத்த அமீர்கான் அவரை சந்தித்ததும் கிட்டத்தட்ட 4 மணிநேரம் பேசியிருக்கிறார்.
தன் திரையுலக வாழ்வில் ஆரம்பகால கட்டத்தில் நடந்த விஷயங்களை எல்லாம் ரஜினி அமீர்கானிடம் பகிர்ந்துள்ளார். அதனால் அவருக்கு நேரம் போனதே தெரியவில்லையாம். தனக்கு இருந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அவ்ளோ நேரமாக ரஜினியுடன் மெய்மறந்து பேசினாராம்.
பல வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். தனது திரையுலக வாழ்க்கையில் ரஜினி பல சாதனைகளைப் படைத்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது. இன்று ரஜினியின் 74வது பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் உற்சாகம் பொங்க கொண்டாடி வருகிறார்கள்.
ரஜினியின் பிறந்தநாளையொட்டி இன்று தளபதி படம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. ரசிகர்கள் இப்போது திரையரங்கையே திருவிழாக்கோலமாக மாற்றி வருகிறார்கள்.