வேட்டையன் ஆடியோ லாஞ்சில் யார் கவனத்தையும் ஈர்க்காத ஒரு விஷயம்! எல்லாம் ரஜினிக்காக

ரஜினிக்காக தன் உடல் நலத்தையும் கவனிக்காத டிடி

By :  rohini
Update: 2024-09-22 08:30 GMT

சமீபத்தில் தான் வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம்தான் வேட்டையன் . இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சுவாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மனசிலாயோ பாடலுக்கு ரீல்ஸ் போட்டு ரசிகர்கள் அவர்களுடைய ஆர்வத்தை காட்டி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமில்லாது பல பிரபலங்களும் அந்தப் பாடலுக்கு ரீல்ஸ் போட்டு சந்தோசப்பட்டு வருகின்றனர். ஒரு பெரிய நடிகரின் பட ஆடியோ விழா என்றால் கட்டுக்கடங்காத கூட்டம் வரத்தான் செய்யும்.

அதைப் போல் வேட்டையன் படத்திற்கும் ஏகப்பட்ட பேர் வந்திருந்தனர். டிக்கெட் பாஸ் வாங்கியவர்களும் உள்ளே வர முடியாமல் தவித்த நிலையை நம்மால் பார்க்க முடிந்தது. இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகளவு டிக்கெட் விற்கப்பட்டிருப்பதாக புகாரும் வந்திருக்கின்றனர். இனிமேல் இதை மாதிரி அடுத்து நடக்காமல் நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும் என சமீபத்தில் ரஜினி இதை பற்றி செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் மனசிலாயோ பாடல் இந்தளவு ஹிட்டானதுக்கு காரணம் முதலில் அனிருத் அடுத்து கண்டிப்பாக தினேஷ் மாஸ்டர் என ரஜினி கூறியிருக்கிறார். இப்படி வேட்டையன் பட ஆடியோ விழாவில் பல சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் ஒருத்தரை பற்றி பேச மறந்து விட்டனர்.

இந்த விழாவை முழு மூச்சாக தொகுத்து வழங்கியது டிடி .ஏற்கனவே அவர் காலில் பல முறை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். சமீபத்தில் கூட அறுவை சிகிச்சை செய்த புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் தொகுத்து வழங்கும் விழாவாக வேட்டையன் விழா அமைந்தது.

கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்த அந்த விழாவில் டிடி நின்று கொண்டே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருப்பதாக தெரிகிறது. இதெல்லாம் ரஜினி ஒருவருக்காகத்தான். ஏனெனில் டிடிக்கு ரஜினி என்றால் கொள்ளை பிரியம். பல இடங்களில் என் தலைவர் ரஜினிதான் என அடிக்கடி கூறியிருக்கிறார். மேலும் ரஜினியின் 50வது பொன்விழா ஆண்டை டிடி தொகுத்து வழங்கினால் அது டிடிக்கு மிகப்பெரிய பெருமை என்றும் சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News