அனிருத்துக்கு இப்படி ஒரு வேண்டுகோள் வைத்த ஏ.ஆர் ரகுமான்!.. ஃபாலோ பண்ணுவாரா ராக் ஸ்டார்..

By :  Ramya
Update: 2025-01-08 06:55 GMT

rahman 

காதலிக்க நேரமில்லை: இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. முழுக்க முழுக்க இந்த காலத்து காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கின்றார் கிருத்திகா.

இந்த திரைப்படம் இந்த வருடம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில் திடீரென்று பொங்கலுக்கு இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன் வந்திருக்கின்றனர் படக்குழுவினர். அந்த வகையில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருக்கின்றது.


இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கின்றார். நடிகர் ஜெயம் ரவிக்கு இந்த திரைப்படம் மிகவும் முக்கியமான படமாகும். காரணம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான பிரதர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அது மட்டும் இல்லாமல் அதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்ததால் தற்போது ஒரு ஹிட் படத்திற்காக காத்திருக்கின்றார் ஜெயம் ரவி.

இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றது. படத்தின் பாடல்கள் அனைத்துமே மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களின் கேள்விக்கு படக்குழுவினர் மிகச் சிறப்பாக பதில் அளித்து இருந்தார்கள். இந்த இசை நிகழ்ச்சியில் அனிருத், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இப்படத்தில் இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் பேசும் போது கூறியிருந்ததாவது 'அனிருத் நன்றாக இசையமைத்து வருகின்றார்.


பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகின்றார். இன்றைய காலத்தில் பத்தாயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் வளர்ந்து வந்த காலத்தில் 10 இசையமைப்பாளர்கள் தான் இருந்தார்கள். ஆனால் தற்போது சினிமாவில் நிலைத்து நிற்பது என்றால் திறமை இல்லாமல் நடக்காது.

எல்லாத்தையும் செய்து விட்டு தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான் என்று சொல்லும் அந்த பணிவு ஆச்சரியப்பட வைக்கின்றது. மேலும் அனிருத்துக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் கிளாசிக்கல் இசையை படித்து விட்டு அதில் நிறைய பாடல்களை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மேலும் இளம் தலைமுறைக்கு நிச்சயம் போய் சேரும்' என்று கூறியிருந்தார். மேடையில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு ஏ ஆர் ரகுமான் வைத்த வேண்டுகோளானது தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News