கண்ணா 5 லட்டு தின்ன ஆசையா!.. அல்லு அர்ஜுனுக்காக அட்லீ பார்த்த வேலை!.. கொலகுத்துதான் போங்க!..
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக 5 ஹீரோயின்கள் நடிக்கப் போவதாக ஒரு அடடே அப்டேட் வந்திருக்கிறது.;
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி, ஜெயிலர் 2 என ரஜினிகாந்த் நடித்து வரும் 2 பெரிய படங்கள் உருவாகி வருகின்றன. லைகா நிறுவனம் போல அல்லாமல் சரியான படங்களை தேர்வு செய்து ச்ன் பிக்சர்ஸ் கல்லா கட்டி வருகிறது. ரஜினிகாந்தை தொடர்ந்து விஜய்யை வைத்து படம் எடுக்க முடியாத சூழலில் அல்லு அர்ஜுன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படம் பேன் வேர்ல்ட் படமாக உருவாகும் என்கின்றனர். ராஜமெளலிக்கே சவால் விடும் அளவுக்கு அட்லீயின் வளர்ச்சி இந்த படத்துக்குப் பிறகு இருக்கும் என ஓவர் பில்டப் கொடுத்து வருகின்றனர்.
சூப்பர் ஹீரோ கதையில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்துள்ள நிலையில், படத்துக்கு ‘ஐகான்’ அல்லது ‘சூப்பர் ஹீரோ’ என்றே தலைப்பு வைக்க அட்லீ முடிவு செய்திருப்பதாகவும் சில டீட்டெய்ல் லீக் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இந்த ரெண்டு பெயர்களும் சுமார் தான் என்றும் அல்லு அர்ஜுன் படத்துக்கு ஃபயராக ஒரு டைட்டில் வைக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக 5 ஹீரோயின்கள் நடிக்கப் போவதாக ஒரு அடடே அப்டேட் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பார் என்றனர். ஆனால், அவர் விலகி விட்டார்.
ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகிய தீபிகா படுகோனே தான் ஹீரோயின் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் மட்டுமின்றி ஜான்வி கபூர், பாக்யஸ்ரீ போர்ஸ், மிருணாள் தாகூர் மற்றும் ஸ்ரீலீலா என சுமார் 5 ஹீரோயின்களையும் படத்தில் கொண்டு வரும் திட்டத்தில் அட்லீ இருக்கிறாராம்.