கண்ணியமாக நடித்த ரச்சிதாவா இது? சினிமாவிற்காக இப்படி மட்டமாக இறங்கிட்டாரே! கடுப்பான ரசிகர்கள்…

By :  Akhilan
Update: 2025-02-05 05:55 GMT

Rachitha Mahalakshmi: தமிழ் சீரியலில் உச்சத்தில் இருந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி சினிமா வாய்ப்பிற்காக தர மட்டமாக இறங்கி நடித்து வரும் திரைப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சின்னத்திரையில் பிரபல சீரியல்களில் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதை தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் தங்க மீனாட்சி கேரக்டரில் அறிமுகமானார். அதுவே அவரின் கேரியரில் மிகப்பெரிய உச்சத்தை உருவாக்கி கொடுத்தது.

தொடர்ச்சியாக, கவின், ஜோ உள்ளிட்ட ஹீரோக்கள் மாறினாலும் தொடர்ந்து பல சீசன்கள் நடித்து வந்தார். அதை தொடர்ந்து மிர்ச்சி செந்தில் நடிப்பில் வெளியான சீரியலிலும் ஹீரோயினாக நடித்தார். இருந்தும் எந்த இடத்திலுமே ரச்சிதா கிளாமராக நடிக்காமல் குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்து வந்தார்.

அதையடுத்து பிக்பாஸ் தமிழ் சீசன் 6ல் கலந்துக்கொண்டார். அவருக்கு முதலில் நல்ல பெயர் இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய கணவர் குறித்து அவர் பேசாததை பலர் அதிர்ச்சியாக பார்த்தனர். மேலும் இன்னொரு போட்டியாளராக இருந்த ராபர்ட் ரச்சிதாவிடம் காதல் பார்வை வீசிய போதும் அதற்கு அமோதிப்பது போல அமைதி காத்ததும் பலர் வித்தியாசமாக பார்த்தனர்.

இதையடுத்து மனைவி ரச்சிதாவுடன் இணைய ஆசைப்பட்ட கணவர் தினேஷ் கோபாலசாமி பிக்பாஸில் கலந்துக்கொண்டு தன் மனைவிக்காக பேசினார். ஆனாலும் ரச்சிதா கணவரை பிரிந்து வாழவே முடிவெடுத்தார். அதுமட்டுமல்லாமல் சீரியலில் இருந்து விலகி சினிமாவில் ஆர்வம் காட்டினார்.

அதுபோல தொடர்ந்து நடித்தும் வருகிறார். அந்த வகையில், நாகர்கோவிலில் காசி என்ற கொடூரனின் கதையை ஃபயர் என்ற பெயரில் படமாக்கி வருகின்றனர். இதில் காசியாக பிக்பாஸ் பாலா நடிக்க அவருடன் முக்கிய வேடத்தில் ரச்சிதாவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் மெதுவாய் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரச்சிதா வெறும் பனியனில் ரொம்ப நெருக்கமாகவே பாலாவுடன் நடித்துள்ளார். கண்ட இடத்தில் கை வைத்து பாலா ரச்சிதாவுடன் ரொமான்ஸ் செய்ய பார்க்கும் ரசிகர்கள் சினிமாவிற்காக மட்டமாக இப்படியா இறங்குவார் என ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

Tags:    

Similar News