கவினின் அட்ராசிட்டியால் குறைந்த மார்க்கெட்.. மாஸ்க் படத்தின் விற்பனையில் நடந்த மாற்றம்..

By :  Ramya
Update: 2025-02-05 08:16 GMT

Actor Kavin: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனராக இருப்பவர் நடிகர் கவின். நடிகர் சிவகார்த்திகேயனை போலவே டிவி நிகழ்ச்சிகள் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய கவின் ஆரம்ப காலகட்டத்தில் சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

அந்த நிகழ்ச்சி மூலமாக பிரபலமான கவின், லிப்ட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். முதல் திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்ததாக டாடா என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதனால் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக மாறினார் கவின்.


பிளடி பெக்கர் திரைப்படம்: நடிகர் கவின் கடைசியாக பிளடி பெக்கர் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் படம் பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் தயாரித்திருந்தார். இருப்பினும் இந்த திரைப்படத்தில் நடிகர் கவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

கவின் லைன் அப்: கடைசி திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி படமாக அமையாத காரணத்தால் அடுத்தடுத்த திரைப்படங்களில் மிகுந்த கவனத்துடன் நடித்து வருகின்றார் நடிகர் கவின். தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் கிஸ், ஹாய் போன்ற திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வரிசையில் மாஸ்க் என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

மாஸ்க் திரைப்படம்: மாஸ்க் திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கின்றார். மேலும் அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்ரம் அசோகன் இந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் கவினுடன் இணைந்து ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் படம் தொடர்பான சில அப்டேட் வெளியாகி இருக்கின்றது.

படத்தின் வியாபாரம்: மாஸ்க் திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமம் 10 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கின்றது. இப்படம் வருகிற மே மாதம் ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. தமிழ்நாடு திரையரங்கு உரிமமானது வெறும் 10 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதற்கெல்லாம் காரணம் நடிகர் கவின் தான் என்று சமூக வலைதள பக்கங்களில் குறை கூறி வருகிறார்கள். ஏனென்றால் இரண்டு வெற்றி படங்களை கொடுத்து விட்டு ஓவராக ஆட்டம் போட்டு வருகின்றார். அதனால் தான் அவரின் கடைசி இரண்டு திரைப்படங்களும் பெரிய அளவிற்கு வெற்றி பெறவில்லை. நடிகர் கவின் இப்படியே சென்றால் நிச்சியம் ஒரு நாள் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று கூறி வருகிறார்கள்.

Tags:    

Similar News