2024-ல் அதிக பட்ஜெட்டில் எடுத்து அட்டர் பிளாப்பான படங்கள்.. இவர் நிலைமைதான் ரொம்ப பாவம்!..
2024 ஆம் ஆண்டு பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. இதில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஃபிளாப்பான படங்கள் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
தங்கலான்: தமிழ் சினிமாவில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது ஆங்கிலேயர் ஆட்சியின் போது தங்க சுரங்கத்திற்காக ஆங்கிலேயர்கள் நிலத்தை கைப்பற்ற திட்டமிட்ட சமயத்தில் அவர்களை எதிர்த்து துணிச்சலாக போராடிய பழங்குடியினர் மக்களின் உண்மை கதையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் 160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் படம் வெறும் 100 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருந்தது. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
இந்தியன் 2: தமிழ் சினிமாவில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக உருவானது இந்தியன் 2 திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். மேலும் கமலஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் வெறும் 160 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரித்திருந்தார்.
வேட்டையன்: ஜெய் பீம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவான திரைப்படம் வேட்டையன். நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா, மஞ்சுவாரியர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
படம் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படம் 250 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்த திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரித்திருந்தார்.
கங்குவா: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, திஷா பதாணி, பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாள் முதலே படம் ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இந்த திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் பாக்ஸ் ஆபிஸில் வெறும் 110 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருந்தது. இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்வி படமாக பார்க்கப்படுகின்றது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
இந்த நான்கு திரைப்படங்களில் தயாரிப்பாளர் சுபாஷ்கரணுக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் தலா இரண்டு திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்திருக்கின்றது. அதிலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கங்குவா திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்கின்றது.