அல்லு அர்ஜுனை ஓவர்டேக் பண்ண ஆதவ் அர்ஜுன்!.. சம்பிரதாயத்தை பத்தி யாருப்பா பேசுறது?..
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா பேசியதை கிண்டலடித்து இருக்கின்றார் ப்ளூ சட்டை மாறன்.
நடிகர் விஜய்:
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் ஒரு படத்திற்கு 250 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார். லைம் லைட்டில் இருந்து வரும் நடிகர் விஜய் இதையெல்லாம் விட்டுவிட்டு அரசியலில் குதித்து இருக்கின்றார்.
தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் அதனை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தில் பதிவிட்டு கட்சியின் கொடி, பாடல் என அனைத்தையும் அறிமுகம் செய்தார். அதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் தனது முதல் மாநாட்டையும் நடத்தி முடித்து இருந்தார்.
அரசியல் கட்சி:
தனது முதல் மாநாட்டில் நடிகர் விஜய் ஆளும் திமுக அரசை எதிர்த்து பேசியிருந்தார். நம் கட்சியின் முதல் எதிரி குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுக தான் என்று கூறியிருந்தது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து மற்ற கட்சியினரையும் மறைமுகமாக சாடி பேசி இருந்தார் நடிகர் விஜய். இந்த மாநாட்டிற்கு பிறகு பலரும் நடிகர் விஜய்க்கு எதிராக மாறினார்கள்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா:
நேற்று நந்தம்பாக்கத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்கின்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, ஆதவ் அர்ஜுனா, விகடன் குழுமத்தின் தலைவர் சீனிவாசன் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள்.
நடிகர் விஜயின் பேச்சு:
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அதிரடியாக பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்திற்காக ட்விட் போடுவதும், சம்ப்ராயத்திற்காக அறிக்கை விடுவதும், மக்களுடன் இருப்பது போல் காட்டுவதும், மழையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதிலும் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு கிடையாது. மக்களுடன் அவர்களின் உணர்வுகளுடன் எப்போதும் இருக்க வேண்டும்' என்று பேசி இருந்தார்.
மேலும் ஆதவ் அர்ஜுனா 2000 கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால் சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். மொத்த திரையுலகையும் அந்த நிறுவனம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. இன்று வரை அதற்கு ஒரு குரல் இல்லை. இந்த குரல் எங்கிருந்து வரவேண்டும். ஏன் சினிமா தொழில் ஒரு நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது. 2026 மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும் என்று அதிரடியாக பேசியிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:
சமூக வலைதள பக்கங்களில் நேற்று முதலே நடிகர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா பேச்சு வைரலாகி வருகின்றது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் புஷ்பா 2 படத்தில் நடித்த அல்லு அர்ஜுனை ஓவர்டேக் செய்து விட்டார் ஆதவ் அர்ஜுனா என்ற பதிவிட்டு இருக்கின்றார்.
நேற்று அவர் பேசிய பேச்சை கிண்டல் செய்யும் விதமாக ப்ளூ சட்டை மாறன் இந்த விமர்சனத்தை பதிவிட்டு இருக்கின்றார். அதனை தொடர்ந்து விஜய்யின் சம்பிரதாய பேச்சுக்கு ஒருவர் போட்டிருந்த பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உண்மையில் விஜய் தான் சம்பிரதாய தலைவர் என்று கூறி இருக்கின்றார். இந்த பதிவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.