ஒன்னு டெரர் போலீஸ்!.. இல்லன்னா டெரர் தாதா!.. ரஜினியை கலாய்க்கும் புளூசட்ட மாறன்...

ரஜினியை பற்றிய புளூசட்ட மாறனின் பதிவு ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது.

By :  Admin
Update: 2024-09-21 03:30 GMT

Vettaiyan: சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. அதுவும் ரஜினி எனில் ஸ்டைலுக்கு சொல்லவே தேவையில்லை. தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய போது 'நடிப்புக்கு கமல் இருக்கிறார். நாம புதுசா எதாவது பண்ணுவோம்' என யோசித்ததால்தான் இப்போது வரை சினிமாவில் கலக்கி வருகிறார் ரஜினி.

தனக்கென ஒரு தனி உடல்மொழி, வசன உச்சரிப்பு, ஸ்டைல் என தேர்ந்தெடுத்தார் ரஜினி. அதுதான் அவரை ரசிகர்களிடமும் கொண்டு போனது. தலைமுடியை அவர் கோதி விடும் ஸ்டைலும், அவரின் நடையும், பேசும் ஸ்டைலும் ரஜினிக்கு ரசிகர்களை உருவாக்கியது. 80களில் குழந்தைகளிடம் ‘ரஜினி ஸ்டைல் செய்து காட்டு’ என்றுதான் கேட்பார்கள்.

அந்த அளவுக்கு குழந்தைகளிடம் ரீச் ஆனார் ரஜினி. குழந்தைகளிடம் யார் அதிகம் ரீச் ஆகிறாரோ அவர்தான் சூப்பர்ஸ்டார் என்பதே திரையுலகின் கணக்கு. ரஜினி அதை சாதித்து காட்டினார். 80,90களில் காதல் கலந்த ஆக்சன் படங்களில் நடித்தாலும் பன்ச் வசனங்களை பேசி அதிர வைத்தார் ரஜினி.

நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதை விட தனக்கு என்ன முக்கியத்துவம்?. மாஸான காட்சிகள் இருக்கிறதா? என யோசித்தே கதைகளை தேர்ந்தெடுத்தார் ரஜினி. இதற்கு பாட்ஷா படம் பெரிய உதாரணம். அந்த படம் ஹிட் அடிக்க துவங்கியதில் இருந்தே மாஸான கதாபாத்திரங்களை அதிகம் விரும்பினார் ரஜினி.

அண்ணாமலை, படையப்பா படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். ரஜினியின் ரசிகர்களுக்கும் அது போன்ற படங்கள்தான் மிகவும் பிடிக்கும். சமீபகாலமாக டெரர் போலீஸ், இல்லன்னா தாதா என்றே மாறி மாறி நடித்து வருகிறார் ரஜினி. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் டெரர் போலீசாக நடித்தவர் வேட்டையன் படத்திலும் அதுபோன்ற வேடத்திலேயே நடித்திருக்கிறார். ஆனால், அது, என்கவுண்டர் தொடர்பான கதை.

இந்நிலையில், பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் டிவிட்டரில் ‘தலைவர் 2 கேரக்டரை அடிக்கடி உருட்டிக்கிட்டே இருக்காரு.. தர்பார், ஜெயிலர், வேட்டையன் படங்களில் டெரர் போலீஸ், காலா, கபாலி, கூலி போன்ற படங்களில் டெரர் தாதா’ என பதிவிட்டு கலாய்த்திருக்கிறார்.

Tags:    

Similar News