நிறைய போட்டி இருந்தும் அந்த நடிகர்தான் வேண்டும் என அடம்பிடித்த ரஜினி! அவரே சொன்ன விஷயம்

சந்திரமுகி படத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த நடிகர்

By :  rohini
Update: 2024-09-21 04:30 GMT

ரஜினி நடித்த பாபா திரைப்படம் எந்தளவு தோல்வி படமாக அமைந்தது என அனைவருக்குமே தெரியும். பெரிய அளவு ந்ஷ்டமடைந்த திரைப்படமாகவும் அமைந்தது. அதனால் நஷ்டமடைந்த வினியோகஸ்தர்களுக்கு தன் சொந்தக் காசை போட்டு அவர்கள் நஷ்டத்தை ஈடுகட்டினார் ரஜினி. அந்தப் படத்தின் தோல்வியை தொடர்ந்து ரஜினிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்த படம்தான் சந்திரமுகி.

சிவாஜி புரடக்‌ஷன் தயாரிப்பில் வாசு இயக்கத்தில் அந்தப் படம் தயாரானது. ஏற்கனவே சந்திரமுகி படத்தின் கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. இதை கன்னடத்தில் பார்த்த ரஜினி தமிழில் நான் நடிக்கிறேன் என வாசுவிடம் சொல்லியிருக்கிறார். அதன் பிறகே வாசு இந்தப் படத்தை தமிழில் எடுத்தார்.

தமிழிலும் சந்திரமுகி திரைப்படம் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும். சந்திரமுகி படத்தில் ஒரு சுவாமிஜியாக வருபவர் கன்னட நடிகர் அவினாஸ். இவர்தான் கன்னட ஆப்தமித்ராவிலும் அதே கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் அந்த ரோலுக்கு தமிழில் ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்க போட்டிப் போட்டுக் கொண்டிருந்தார்களாம்.

ஆனால் ரஜினி கன்னடத்தில் நடித்த அவினாஸ் தான் தமிழிலும் நடிக்க வேண்டும் என அடம்பிடித்திருக்கிறார். அதுவரை ரஜினியை நேராக அவினாஸ் பார்த்தது கூட இல்லை. இருந்தாலும் கன்னடத்தில் அவர் நடிப்பை பார்த்து மிரண்ட ரஜினி தமிழில் அவர் நடிக்க காரணமாகியிருக்கிறார்.

மேலும் அவினாஸை பொறுத்தவரைக்கும் இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் இரண்டு நடிகர்களுடன் எடுத்த புகைப்படத்தைத்தான் நியாபகமாக வைத்திருக்கிறாராம். ஒன்று ரஜினி. மற்றொருவர் அஜித். இரண்டு பேருமே மிகவும் இனிமையான மனிதர்கள். பழகுவதற்கு எளிமையானவர்கள். அக்கறையுடன் இருப்பார்கள்.




 


இப்படிப்பட்ட மனிதர்களை நான் பார்த்ததே இல்லை என்று அவினாஸ் கூறியிருக்கிறார். அவினாஸின் மகன் மூளை வளர்ச்சி குறைபாடுடையவராம். அதனால் அவர் மகனை பற்றி அடிக்கடி நலம் விசாரித்துக் கொண்டே இருப்பாராம் அஜித். 

Tags:    

Similar News