அரசியலுக்கு வர நடிகன் முதல்ல என்ன செய்யணும்? விஜயை மறைமுகமாகச் சாடும் போஸ் வெங்கட்?
அரசியல்னா என்னன்னு பாடமே நடத்திட்டாரே போஸ் வெங்கட்...!
கங்குவா படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். இந்த விழாவில் நடிகர் போஸ் வெங்கட் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. என்ன சொல்றாருன்னு பாருங்க...
ரசிகர்களை வழி நடத்தணும். எப்படி வழி நடத்தணும்னா உங்களை மாதிரி வழி நடத்தணும். தர்மம் செய்ய, உதவி செய்ய இப்பவே சொல்லிக் கொடுத்துடணும். மக்களுடைய பிரச்சனையை எப்படி கவனிக்கணும்னு சொல்லிக் கொடுக்கணும். எப்படி வாழணும்னு சொல்லிக் கொடுக்கணும்.
எல்லாத்தையும் மீறி உங்களுக்கு அறிவு கொடுத்துடணும். எல்லாத்தையும் மீறி உங்களுக்குப் படிப்பு கொடுத்துடணும். அதுக்கு அப்புறம் அரசியலுக்கு வரணும். அப்படின்னு நடிகர் போஸ் வெங்கட் பேசினதும் கூட்டம் ஆர்ப்பரித்தது.
ஒரு தலைவன் என்ன வேலை செய்யணும்கறது முக்கியமல்ல. தலைவன் நடிகனாக இருக்கலாம். பேச்சாளராக இருக்கலாம். எழுத்தாளராக இருக்கலாம். ஐஏஎஸ் ஆக, டாக்டராக இருக்கலாம். என்ன வேணாலும் இருக்கலாம். ஆனால் தலைவனோ பேசிக் ரசிகனை முட்டாள வைத்து இருக்கக்கூடாது. அவனை அறிவாளியாக வைத்து இருக்க வேண்டும்.
அவனைப் படிக்க வைக்கணும். அவனை வளர்க்கணும். அதுக்கு அப்புறம் அரசியலுக்கு வரணும். அப்படிப் பார்த்தா நீங்க அரசியலுக்கு வரணும். அதுக்கு முன்னாடி கமல் சாருக்கு அப்புறம் நீங்க நல்ல நடிகரா இருக்கீங்க. நிறைய நடிச்சி எங்களுக்குத் திருப்திகரமான திரைப்படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு நீங்க கட்டாயமாக அரசியலுக்கு வரணும் என்று பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
இவர் பேசியதைப் பார்க்கும்போது சூர்யாவைப் போல ஒரு தலைவன் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் விஜயைப் போல தலைவன் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் மறைமுகமாகத் தாக்குவது போல உள்ளது.
இன்று விஜயின் மாநாடு விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடக்கிறது. இவரது பேச்சுக்கு விஜய் பதிலடி கொடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.