தேவாவைப் பழிவாங்கும் இசைஞானி? இதெல்லாம் தேவையா? பிரபலம் விளாசல்

By :  Sankaran
Update:2025-02-15 08:06 IST
ilaiyaraja, deva
  • whatsapp icon

இளையராஜா, தேவாவுக்கு இடையே மோதல் இருக்கிறதா என்ற கேள்விக்கு எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான சபீதா ஜோசப் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

தேவா போட்டியா: இளையராஜா இமயமா அந்தப்பக்கம் இருப்பாரு. இந்தப்பக்கம் ரகுமான் இருப்பாரு. நடுவுல வந்து தேவா கடகடன்னு 500 படத்துக்கு மேல அடிச்சிட்டுப் போயிட்டாரு. ஒரே வருஷத்துல 40 படங்கள் எல்லாம் இசை அமைச்சிருக்காரு. தேவாவைப் போட்டியா எடுத்துக்கிட்டது யாருன்னா ராஜா தான். அவர் பிசியா இருந்தாலும் பெரிய ஹிட் கொடுத்தா திரும்பிப் பார்க்க வச்சிடும்.

முதல்படமே சூப்பர்ஹிட்: குஷி, வாலின்னு சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தாரு. முதல்படமே வைகாசி பொறந்தாச்சு. சூப்பர்ஹிட் பாடல்கள். சிவசக்தி பாண்டியனோட காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், வான்மதி என 15 படங்கள் எடுத்தார். இதெல்லாமே தேவா தான். சலோமியா, வெள்ளரிக்கா பிஞ்சு, தஞ்சாவூரு மண்ணெடுத்துன்னு பல பாடல்களைப் பாடியுள்ளார்.

இடையூறு: தேவா கொடுத்த சூப்பர்ஹிட் பாடல்களைப் பற்றி வாலியே சொல்லிருக்காரு. யாராக இருந்தாலும் மரியாதைக் கொடுப்பார் தேவா. அனைவரையும் அரவணைத்துப் போவது இவரது குணம். இப்போது தேவா இசைக்கச்சேரி பண்ணுகிறார். அங்கும் வந்து இடையூறு பண்ணுகிறார் இளையராஜா. மதுரையில் தேவா பிரமாதமாக இசைக்கச்சேரி பண்ணுகிறார்.

இசைக்கச்சேரி போட்டி : அங்கு பண்ணுகிறார் என்றதும் நெல்லையில் இளையராஜா இசைக்கச்சேரி என்கிறார். சிங்கப்பூருல இசைக்கச்சேரி தேவான்னதும் அடுத்து இளையராஜாவும் அங்கு செல்கிறார். இதனால் டிக்கெட் வேல்யு குறைகிறது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திண்டுக்கல்லில் தேவா கச்சேரி என்றதும் இளையராஜாவுக்கு இது தெரிகிறது. உடனே என்னை எல்லாரும் பார்க்க விரும்புறாங்க.


அதனால வேலூர், சேலம், திண்டுக்கல் எல்லாம் நான் இசைக்கச்சேரி பண்ணப் போறேன் என்கிறார். உடனே ராஜா வர்றாராம். எங்களுக்கு வேணாம்னு தேவாவிடம் சொல்றாங்களாம். இளையராஜா செய்வது தேவையில்லாத வேலை. 

இதெல்லாம் தேவையா?: சாமியாரா ஆகிட்டீங்க. இனி தேவையா? பசங்க நல்ல சம்பாதிக்கிறாங்க. மாமனாரும் செல்வந்தர்தான். இதெல்லாம் தேவையா? பொண்ணு நல்லா இருக்கும்போது பெரிசா கண்டுக்கல. அதோட வாழ்க்கை பாவம் முடிஞ்சிடுச்சு. அவருக்காகத்தான் இருக்காரு. வேற யாருக்காக இருக்காரு? இசைக்கடவுள்னு சொல்றோம். ஆனா மனரீதியா பக்குவப்படாம இருக்காரு. இசையில அவர் பெரிய ஆளுதான். அதுல நாம தலையிட வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News