எஸ்.கே. பட இயக்குனரை தட்டி தூக்கிய சியான் விக்ரம்!.. இது வேறலெவல் காம்போ!....

By :  Murugan
Update: 2024-12-11 06:30 GMT

chiyan

Actor vikram: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக மாறியவர் சியான் விக்ரம். அதன்பின் தில், தூள், சாமி என கமர்ஷியல் படங்களில் நடித்து மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். சாமி படத்தின் வெற்றிக்கு பின் இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது.

ஒருபக்கம் கமர்சியல் படங்கள், ஒரு பக்கம் நடிப்பு மற்றும் தோற்றத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் நடிகர் இவர். காசி, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அதிலும் ஐ படத்தில் உடலை ஏற்றியும், குறைத்தும் அதிர வைத்திருந்தார்.

பிதாமகன் படத்திற்கு தேசிய விருதும் வாங்கினார். இத்தனைக்கும் அந்த படத்தில் இவருக்கு வசனமே இல்லை. உடல் மொழியை வெளிப்படுத்தியே நடித்திருந்தார். ஒருபக்கம் விக்ரமின் மகன் துருவும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தார்.


இப்போது மாரி செல்வராஜின் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மகன் சினிமாவுக்கு வந்துவிட்டாலும் அவருக்கும் சேர்த்து டஃப் கொடுத்து வருகிறார் சியான் விக்ரம், அருண்குமார் இயக்கத்தில் இவர் நடித்துள்ள வீர தீர சூரன் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஒரு பக்கா கேங்ஸ்டர் ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், விக்ரம் நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான செய்திகள் வெளியே கசிந்திருக்கிறது.

மண்டேலா திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மடோன் அஸ்வின். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் படத்தை எடுத்தார். இந்த படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில், விக்ரமின் அடுத்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.

Tags:    

Similar News