தீ படத்தின் ரீமேக்தான் கூலியா? இனிதான் காளியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க!
கூலி படப்பிடிப்பில் ரஜினி முன்பை விட பயங்கர எனர்ஜியோட இருக்காராம். கிரேயா யோகா ரஜினிக்கு ரொம்ப நல்லா தெரியுமாம். அது இருக்குற சக்தியை முழுக்க சேர்த்து உடலில் கொடுக்குமாம். மனோபலத்தையும் தருமாம். ரஜினி இனி அவ்ளோதான். அவர் 20 நிமிஷம் நடிப்பாரு. 80 நிமிஷம் டூப் போடுவாருன்னு சொன்னாங்க. ஆனா அவர் உற்சாகமாக பல காட்சிகளில் நடித்து வருகிறார். மைசூர், கேரளான்னு ரஜினி பறக்கிறார்.
கூலி ஆகஸ்டு 14ல் ரிலீஸ் ஆகப்போகிறது. அன்றுதான் ரஜினி திரைத்துறைக்கு வந்த 50வது ஆண்டு விழா. இந்தக் கூலி படத்தின் ஆடியோ லாஞ்சில் சேர்ந்து ரஜினியின் 50வது ஆண்டு விழாவையும் கொண்டாடப் போகிறார்களாம். நான் தோள்ல தூக்கி வளர்த்த பையன். இன்னைக்கு எவ்வளவு உயரத்துக்கு வந்து எனக்கு மியூசிக் போட்டு காவாலா பாடலையும் போட்டுக் கொடுத்துருக்காரு. சிக்கிடு பாடலில் டிஆரும் பாடியுள்ளார்.
சிக்கிடு பாடலுக்கான லிரிக் வீடியோ வெளியானது. சாண்டி மாஸ்டரும், அனிருத்தும் வந்த டிரஸ் ரஜினியின் பழைய தீ படத்தோட காஸ்டியூம் தானாம். கூலி தீ படத்தின் ரீமேக் மாதிரி தான் இருக்காம். தங்கம் கடத்தலைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருக்குமாம். கோல்டு வாட்சைத் தான் திரும்ப திரும்பக் காட்டிக்கிட்டே இருக்காங்க.
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினி முதன் முறையாகக் கைகோர்த்துள்ளார். அமீர்கான், நாகர்ஜூனா, சுருதிஹாசன், உபேந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வழக்கமான போதை பொருள் கடத்தால் இருக்காதாம். அதற்கு மாற்றாகத் தங்கக் கடத்தல் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் அந்தக் கோல்டு வாட்சையே காட்டுகிறார்களாம்.
காளியோட ரியல் ஆட்டத்தையே இனிதான் பார்க்கப் போறீங்கன்னு சொல்லலாம். சிக்கிடு பாடல் பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்துள்ளது. தமிழ்சினிமாவின் முதல் 1000 கோடியை அடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.