பிஆர் டீமை அடக்கி வைக்கும் தனுஷ்.. உச்சத்தில் இருந்தாலும் இப்படியொரு அடக்கமா?

By :  ROHINI
Update: 2025-05-13 11:19 GMT

dhanush

தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் முதல் படத்திலேயே அவருடைய நடிப்பை நிரூபித்தார். விடலை பருவ காதலை மையப்படுத்தி வெளிவந்த இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஷெரின் நடித்திருந்தார். அதை தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வந்த தனுஷ் இன்று அனைவருமே மெய்சிலிர்த்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

கோலிவுட் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் புகழ்பெற்ற நடிகராகவும் மாறியிருக்கிறார். ஆரம்பத்தில் இளசுகளுக்கான படங்களிலேயே நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் முகம் சுழிக்கும் அளவுக்கு நடித்து வந்தார். ஆனால் இப்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் குடும்பம் குடும்பமாக போய் பார்க்கும் அளவுக்கு அவருடைய படங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் சினிமாவில் பல வருடம் அனுபவம் வாய்ந்த ஒருவர் எப்படி தேர்ந்தெடுத்து நடிப்பாரோ அப்படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ். நடிகராகவும் இல்லாமல் சிறந்த படைப்பாளியாகவும் திகழ்ந்து வருகிறார். இயக்குனராக பவர் பாண்டி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை இயக்கிய தனுஷ் இப்போது இட்லி கடை படத்தையும் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தனுஷின் வளர்ச்சியை பற்றி வலைப்பேச்சு அந்தணனிடம் நிருபர் ஒருவர் ‘தனுஷின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? எல்லா மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.அவருடைய மார்கெட் எல்லா மொழிகளிலும் எப்படி இருக்கிறது?’ என்ற ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த அந்தணன் ‘எல்லா இடத்திலும் நன்றாக இருக்கிறது’

dhanush

‘உள்ளது உள்ளபடியே தனுஷ் அளவுக்கு இங்கு வேறொரு ஹீரோ இருந்தாருனா பயங்கர அலட்டலா இருந்திருக்கும். பெரிய விளம்பரமா மாறியிருக்கும். அங்க அவ்ளோ நடிக்கிறாரு. இங்க இவ்ளோ நடிக்கிறாரு. இவ்ளோ சம்பளம் வாங்குறாரு என பெரிய அளவில் விளம்பரப்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் தனுஷா இருக்கிறதுனால அவர் அடிப்படையில் சிவனை வணங்குறவரா இருக்குறதுனால கொஞ்சம் ஆன்மீகமாக இருக்கிறார்.அதனால்தான் அப்படியே அடக்கி வாசிக்கிறாரு. அவருடைய பி.ஆர் டீமையே அடக்கிட்டாரு. இதே வேறொரு நடிகராக இருந்தால் அலட்டல் ஓவரா இருந்திருக்கும்’ என அந்தணன் கூறினார்.

Tags:    

Similar News