குபேரா ஹிட்!.. தனுஷுக்கு குவியும் வாய்ப்புகள்!. ஆனா அவர் சொன்ன பதில் இதுதான்!...
Dhanush: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் துவங்கியது இவரின் கலைப்பயணம். அதன்பின் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களிலும் நடிப்பது இவரின் ஸ்டைல்.
அப்படி இவர் நடித்த ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. அதேபோல், மாரி செல்வராஜின் இயக்கத்தில் நடித்த கர்ணன் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் சினிமாவில் மட்டும் நடித்து வந்த தனுஷ் ஹிந்திக்கும் போனார்.
அதன்பின் ஹாலிவுட் படங்களிலும் நடித்தார். கடந்த சில வருடங்களாக தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டர். தெலுங்கு இயக்குனர்கள் இயக்கிய வாத்தி, குபேரா போன்ற தனுஷ் படங்கள் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. அதிலும், குபேரா படம் ஹிந்தியிலும் வெளியானது.
இந்த படத்தை சேகர் கம்முல்லா இயக்கியிருந்தார். இவர் தெலுங்கில் சிறந்த படங்களை இயக்கியவர். குபேரா படத்தில் பிச்சைக்காரராக நடித்திருந்தார் தனுஷ். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும், ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்துவிட்டது.
120 கோடி செலவில் உருவான இப்படம் 127 கோடி வரை வசூல் செய்தது. இது தியேட்டர் மூலம் கிடைத்த வருமானம் மட்டுமே. இது போக டிவி, ஓடிடி, இசை போன்ற உரிமைகள் மூலம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்கு தனுஷுக்கு தேசிய விருது கொடுக்கவில்லை எனில் விருதுக்கு மரியாதை இல்லை என சிரஞ்சீவியே பாராட்டினார். குபேரா ஹிட் என்பதால் தெலுங்கில் தனுஷுக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.
ஆனால், இன்னும் 2 வருடங்களுக்கு என்னிடம் கால்ஷீட் இல்லை என கைவிரித்துவிட்டாராம் தனுஷ். தனுஷ் இப்போது போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் மாரி செல்வராஜ், வெற்றிமாறன், தமிழரசன் பச்சைமுத்து, ராஜ்குமார் பெரியசாமி போன்ற இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.