என்னையாடா கலாய்க்குறீங்க!.. உங்களை வச்சி செய்யுறேன்!.. தினசரி பட நடிகை சிந்தியா கோபம்!..
Dinasari movie: சினிமாவை பொறுத்தவரை எல்லோரும் அழகாக இருப்பார்கள் என சொல்ல முடியாது. ஆனால், பார்க்க பார்க்க பழகிவிட்டால் ரசிகர்களுக்கு பிடித்துப் போகும். தனுஷெல்லாம் சினிமாவுக்கு வந்த போது அவரை நக்கலடித்தவர்கள் பலர். ஒல்லியான உடம்பு, முக தோற்றம் என பலவற்றையும் கிண்டலடித்தார்கள்.
ஹீரோக்களின் முகம்: ஒரு படத்தில் ‘என்னை மாதிரி பசங்களையெல்லாம் பாத்தா பிடிக்காது. பாக்க பாக்கத்தான் பிடிக்கும்’ என பேசியிருப்பார் தனுஷ். அதுதான் உண்மை. ஒரு முகத்தை அடிக்கடி காட்டி ரசிகர்களை மைண்ட் செட் செய்து விட்டால் போதும்.. ஏற்றுக்கொள்வார்கள் என்பதே இயக்குனர்கள் தெரிந்து வைத்திருக்கும் இலக்கணம். இது உண்மையும் கூட.
ரஜினியை கூட அவர் நடிக்க வந்த புதியில் அவரின் நிறம், முகம் மற்றும் சீவாத தலை முடி என எல்லாவற்றையும் கிண்லடித்தார்கள். ஆனால், தனது நடிப்பு மற்றும் ஸ்டைல் மூலம் அதையே ரசிகர்களை ரசிக்கவைத்தார் ரஜினி. ஆனால், அந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது.
தினசரி சிந்தியா: ஸ்ரீகாந்த் நடித்துள்ள தினசரி படத்தின் கதாநாயகி சிந்தியா சில நாட்களுக்கு கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். அந்த படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். இந்த படத்தின் டிரெய்லரை ரஜினியை சந்தித்து அவரை வைத்து வெளியிட்டு அவரிடம் வாழ்த்து பெற்றார் சிந்தியா. ஆனால், போஸ்டர்களையும், பாடல் காட்சிகளையும் பார்த்து அவர் திருநங்கை போல இருக்கிறார் என்றெல்லாம் பலரும் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்தார்கள்.
அவரோடு சேர்ந்து ஸ்ரீகாந்தையும் ட்ரோல் செய்தார்கள். இதையடுத்து ‘திட்டினா திட்டிட்டு போங்க.. நான் சோசியல் மீடியாவிலேயே இல்லை’ என கோபமாக பேட்டி கொடுத்தார் ஸ்ரீகாந்த். மேலும், சிந்தியாவை ட்ரோல் செய்ய வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சிந்தியா ‘இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். இன்னும் நிறைய படங்களை எடுப்பேன். என்னை புறக்கணிக்கவே முடியாது. அவர்கள் என்னை பார்த்துக்கொண்டேதான் இருக்க வேண்டும்.. இன்றைக்கு பெரிய ஸ்டாராக இருக்கும் எல்லோருமே துவக்கத்தில் அவமானங்களை சந்தித்தவர்கள்தான். என்னை மோசமாக விமர்சித்தவர்களை வைத்து செய்யப்போகிறேன்’ என பொங்கியிருக்கிறார்.