இயக்குனர் களஞ்சியத்துக்கும் அஞ்சலிக்கும் என்ன தான் பிரச்சனை... இதுதான் நடந்துச்சா?

பூமணி, நிலவே முகம் காட்டு, மிட்டாமிரசு, கிழக்கும் மேற்கும் ஆகிய படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். இவருக்கும், அஞ்சலிக்கும் இடையே பெரிய பிரச்சனை ஒன்று வெடித்திருந்தது. அது என்ன? உண்மையில் நடந்தத என்னன்னு அவரே பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இப்படி சொல்கிறார்.

நான் அஞ்சலியை வைத்து திலோத்தமை வேடத்தில் நடிக்க வைத்து ஒரு டெலிபிலிம் எடுத்தேன். என் கனவு நீதானடி என்ற படம் தான் அஞ்சலிக்கு முதல் படம். ஆனால் அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு. தெலுங்குல போட்டோன்னு ஒரு படம் அஞ்சலிக்கு வந்தது.


அப்புறம் கற்றது தமிழ், அங்காடித் தெருன்னு அவங்க மார்க்கெட் ஏறிச்சு. அப்போ தான் கருங்காலி படம் எடுத்தேன். அதே டீமோடு அடுத்த படம் பண்ணலாம்னு நினைச்சி எடுத்தோம். இரவு 2 மணி வரை சூட்டிங் நடக்கு. இத்தாலி படத்தின் தழுவல் தான் அது. மனமுதிர்ச்சி அடையாத பெண் கதாபாத்திரத்தில் அஞ்சலி நடிக்கிறார். நான் ஆன்ட்டி ஹீரோ.

மூன்றாம்பிறை ஸ்ரீதேவி மாதிரி கேரக்டர் எனக்குக் கிடைச்சிருக்கு. உறுதியா தேசிய விருது வாங்குவேன்னு கண்கலங்கி சொல்லிட்டுப் போனது. தெலுங்கு படம் நடிக்கப் போயிட்டு வரவே இல்லை. அவங்க குடும்ப ரீதியா எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தீர்த்து வைக்கிறது நான் தான். அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போனதும் அது கூட இருக்குற ஆள்கள் களஞ்சியம் சாரை வெட்டி விடணும்னு முடிவு பண்றாங்க.

அதனால சில குற்றச்சாட்டுகளை வைக்கிறாங்க. என் சொத்தை எல்லாம் பறிமுதல் பண்ணிட்டாரு... என்னை ஏமாத்திட்டான்னு அந்தப் பொண்ணை விட்டு சொல்ல வைக்கிறாங்க. நான் மறுநாளே மான நஷ்ட வழக்கு போட்டுட்டேன். பிடிவாரண்டு கூட போட்டாங்க. அந்தப் பொண்ணு எங்கே இருக்குன்னு தெரியல. அஞ்சலி இப்போ என்னை சந்திச்சா அவங்க என் மேல கோபப்படவோ வருத்தப்படவோ பாயிண்ட் இல்லை.

எனக்கும் இல்லை. யாரோ ஒருத்தன் திரும்ப அவன் படத்துல அஞ்சலியை நடிக்க வைக்கக்கூடாது. அவங்க குடும்பத்துல உள்ளவங்க பேச்சுவார்த்தை பண்ண வருவாங்க. அது சரிப்பட்டு வராதுன்னு என்னை நெகடிவ் கேரக்டரா ஆக்கிட்டாங்க. எனக்கும் அஞ்சலிக்கும் எந்த கான்ட்ரவர்சியும் கிடையாது.

அதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணை சந்திக்கவே இல்லை. நான் எப்படியாவது அந்தப் பொண்ணை நடிக்க வைக்கலாம்னு முயற்சி பண்ணினேன். ஆனா அது கைகூடாம போயிடுச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it