டி.ஆர் டியூனை காப்பி அடித்த லோகேஷ்!.. எப்படி இருக்கு கூலி பட வீடியோ?!...
Coolie: ரஜினிக்கு இன்று பிறந்த நாள். எனவே, அவரை பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடும் காட்சிகளை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்கள்.
ரஜினியின் நடனம்:
இந்த வீடியோவில் வரும் காட்சிகளில் ரஜினி செமயாக நடனமாடியிருக்கிறார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் இப்படித்தான் நடனம ஆடியிருந்தார். கார்த்திக் சுப்பாராஜ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அவர் ரஜினியை பல படங்களில் எப்படியெல்லம் ரசித்தாரோ அது போல் பேட்ட படத்தில் அவரை காட்டியிருந்தார்.
லோகேஷ் என்னதான் தீவிர கமல் ரசிகராக இருந்தாலும் அவரும் ரஜினியை ரசிக்காமல் வளர்ந்திருக்க மாட்டார். அது கண்டிப்பாக இந்த வீடியோவை பார்க்கும்போதே தெரிகிறது. ஒரு நல்ல ரசிகன்தான் ஒரு நல்ல கலைஞன் ஆக முடியும் என்பார்கள். அப்படி 80, 90களில் வந்து ஹிட் அடித்த பழைய பாடல்களுக்கு ரசிகராக இருப்பவர்தான் லோகேஷ். எந்த பாடலெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்ததோ அதையெல்லாம் தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.
விக்ரம்:
விக்ரம் படத்தில் மன்சூர் அலிகான் ஆடிய ‘வத்திக்குச்சி பத்திக்கிச்சி’ பாடலை பயன்படுத்தி இருந்தார். மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதிக்கு ஒரு பன்ச் கொடுத்துவிட்டு ‘வாடா என் மச்சி வாழக்கா மச்சி. உன் தோலை உறிச்சி போடப்போறேன் பஜ்ஜி’ என பாடிக்கொண்டே விஜய் நடனமாடுவது போல காட்சிகளை எடுத்திருந்தார் லோகேஷ். அதேபோல் லியோ படத்தில் காபி ஷாப் வைத்திருக்கும் விஜய் ‘கருகரு கருப்பாயி’ பாடலுக்கு விஜய் நடனமாடுவது போல காட்சிகளை எடுத்திருந்தார்.
இந்நிலையில், இப்போது வெளியிட்டிருக்கும் வீடியோவிலும் டி.ஆரின் டியூனை பயன்படுத்தி இருக்கிறார். ஒரு பேட்டி ஒன்றில் வாயாலேயே டி.ஆர். போட்ட டியூன் இந்த பாடலில் வருகிறது. ரஜினியும் செமத்தியாக நடனம் ஆடியிருக்கிறார். டி.ஆர்.குரலை தாண்டி அனிருத்தும் செம குத்து இசையை கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக இந்த பாட்டு ரஜினி ரசிகர்களை தியேட்டரில் ஆட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினியோடு சத்தியராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.