காளியின் தரமான சம்பவம்!.. கம்பேக் கொடுத்த நடிப்பு அரக்கன்.. வீர தீர சூரன் டீசர் எப்படி இருக்கு?..
வீர தீர சூரன் திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் அப்படம் எப்படி இருக்கின்றது என்பது தொடர்பான விமர்சனத்தை பார்ப்போம்.
வீர தீர சூரன்:
நடிகர் சியான் விக்ரம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். தமிழ் சினிமாவில் சேதுபதி, சித்தா ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். சியான் விக்ரமின் 62 ஆவது படமாக இப்படம் உருவாகி இருக்கின்றது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா உடன் இணைந்து சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள். மேலும் இப்படத்தில் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
அதாவது இப்படத்தின் இரண்டாவது பாகம் முதலில் வெளியாக உள்ளது. அதன் பிறகு இப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள். இப்படத்தில் காளி என்கின்ற கேங்ஸ்டர் வேடத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்திருக்கின்றார். படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
மேலும் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்திருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கின்றது.
டீஸர் எப்படி இருக்கு?
காளி என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் நடிகர் சியான் விக்ரம் இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றார். மேலும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா மிரட்டி இருக்கின்றார். முதலில் இந்த படத்தில் மளிகை கடை நடத்தி வரும் விக்ரம் பெண் குழந்தையை மிகுந்த பாசத்துடன் கவனித்து வருவது போல் முதல் காட்சி இடம் பெற்று இருக்கின்றது.
அதை எடுத்து துஷாரா விஜயனுடன் நடிகர் விக்ரம் ரொமான்ஸையும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கின்றார். போலீஸ் அதிகாரியாக எஸ் ஜே சூர்யா மிரட்டி இருக்கின்றார்.
மேலும் துப்பாக்கி முனையில் மிரட்டும் போது விக்ரம் வேண்டாம் பேசாம போயிரு அதான் உனக்கு நல்லது என்று கூறும் வசனம் அனைத்தும் மிரட்டலாக உள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கின்றது.
நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று சுமாரான வெற்றியை கொடுத்திருந்தது. இதனால் இந்த திரைப்படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமையும் என்று ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கூறி வருகிறார்கள்.