நெகடிவ் விமர்சனங்களுக்கு ஷங்கர் கொடுத்த பதிலடி... நெத்தியடியால்ல இருக்கு!

By :  Sankaran
Update: 2025-01-14 10:40 GMT

பொதுவாக இன்று பான் இண்டியா படத்தைப் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் தமிழ்சினிமாவை உச்சத்திற்கு உலக அரங்கில் எடுத்துச் சென்றவர் இயக்குனர் ஷங்கர். சமீபத்தில் கேம் சேஞ்சரை இயக்கியுள்ளார். இந்தப் படம் பொங்கல் விருந்தாக வந்து ரசிகர்களை பிரமிக்க வைத்து வருகிறது. அதே நேரம் நெகடிவ் விமர்சனங்களும் வழக்கம்போல வந்த வண்ணம் உள்ளன.

1000 கோடி: தமிழ்சினிமாவில் 1000 கோடி இன்னும் வசூல் வரவில்லையே என சோஷியல் மீடியாவில் ஒரு டாக் போய்க்கொண்டுள்ளது. இதைப் பற்றி ஷங்கர் சொன்னது இதுதான். அப்படிப் பார்க்குறதே தப்பு. நல்ல படம் கொடுக்கணும். ஆடியன்ஸை திருப்திப்படுத்தணும். ஒரு நம்பரை மட்டும் வச்சிப் பார்த்தா அந்தப் படத்துல என்னென்ன அம்சங்கள் இருக்கோ அதையே வைக்க வேண்டி வரும்.

அதை கனெக்ட் பண்றதுக்கு ஒரு கதை பண்ண வேண்டிய அபாயம் வரும். அப்படி ஹைலைட்ஸா பார்த்துக்கிட்டு இருக்கும்போது ஒரு நேர்த்தியான கதை அமையாமல் போய்விடும். அப்படி யோசிச்சா ஒரு நல்ல திரைப்படம், நல்ல கதை அம்சம் கொண்ட படம் வருமாங்கறது என்னைப் பொருத்தவரைக்கும் சந்தேகம்தான்.


ஒரு நல்ல கதையை சிறப்பா பண்ணினா அது இன்னும் என்ன நம்பர் வேணாலும் பண்ணும்கறதுதான் என்னோட கருத்து. பார்ட் ஒன்னை விட பார்ட் 2 படங்கள் ஏன் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லைன்னு கேட்டதுக்கு அதுக்கு என்ன காரணம்னு தெரியல. பார்ட் ஒன்னை விட 2க்கு பெரிய அளவில் தான் வேலை செய்றோம். ஆனா அதுக்கு என்ன காரணம்னு தெரியல.

3 வருஷம்: ஒரு படத்துக்கு ஏதாவது ஒரு சூழல்தான் அது லேட்டாகக் காரணமாயிடுது. மழை வரும். அப்போ செட்டை வந்து அடிச்சிட்டுப் போகுது. திரும்ப செட் போடுற வரை வெயிட் பண்ணனும். கேம் சேஞ்சர்ல ராம் சரணுக்குத் தாடி வளர்த்து சூட்டிங் பண்ணும்போது ஏதாவது ஒரு காரணத்தால கேன்சல் ஆகிடுச்சுன்னா திருப்பி தாடி வளர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டி வரும்.

அது டைரக்டர் கன்ட்ரோல்ல கிடையாது. இவர் பண்ற படம்னாலே 3 வருஷம்னு சொல்வாங்க. இன்னொன்னு பட்ஜெட் இந்த மாதிரி காரணங்களால ஜாஸ்தியாகும். சில நேரங்களில் மிகைப்படுத்தியும் சொல்வாங்க.

எந்திரன் 2.O: சமீபத்தில் ரஜினியை செட்டுல இப்படி நடத்துனாங்கன்னு எல்லாம் சொல்றாங்க. இதுக்கு என்ன மாதிரியான பதில் சொல்றீங்கன்னு ஆங்கர் கேட்டதுக்கு ஷங்கர் இப்படி பதில் சொல்கிறார். மக்களுக்குத் தெரியும். அவங்க உத்துப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்காங்க.

ஒருவர் பேச்சில் இருந்து அவங்க நடவடிக்கையில இருந்து என்ன மாதிரியான ஆளுன்னு. எந்திரன் 2.O படத்துல ஷங்கர் ரஜினியை அப்படி ட்ரீட் பண்ணினதால தான் இனி அவரது படத்தில் நடிக்க மாட்டேன் என்று ரஜினி சொன்னதாக ஒரு தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

கேம் சேஞ்சர்: கேம் சேஞ்சருக்கான யூடியூப் ரிவியூஸ் எல்லாம் நான் பார்க்கல. எல்லாம் கேள்விப்பட்டதுதான். அதுவரை நல்ல ரிவியூஸ்தான் வந்துக்கிட்டு இருக்கு என்றார் ஷங்கர். சில நெகடிவ் ரிவியூஸ்களும் யூடியூப்பில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News