விஜயிற்கு எல்லா கெட்ட பழக்கங்களும் இருக்கு… ஆட்டம் காணும் தவெக… முடிச்சிவிட்டீங்க போங்க..
TVK Vijay: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில் தற்போது இன்னொரு ஆடியோ விவகாரம் கட்சியில் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம்: நடிகர் விஜய் கட்சி தொடங்க இருப்பதாக சலசலப்பு உருவானது. அதற்கேற்ப விஜய் அதிகாரப்பூர்வமாக தான் கட்சி தொடங்க இருப்பதாகவும் அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் என்றும் அறிவித்தார். தொடர்ந்து தான் சினிமாவில் இருந்து விலக இருப்பதையும் அறிவித்தார்.
அதை தொடர்ந்து கட்சியின் பாடல், கொடி என விழாக்கோலமாக எல்லாத்தையும் அறிவித்தனர். மேலும், விக்கிரவாண்டியில் கட்சியின் மாநில மாநாடு கோலாகலமாக நடந்தது. அதில் ரசிகர்கள் கோடிக்கணக்கில் கூடியது ஒரு பக்கம் என்றால் விஜயின் அரசியல் பேச்சு ஒரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சுணக்கம் காட்டும் விஜய்: ஆரம்பம் நன்றாக இருந்தாலும் விஜயின் சமீபத்திய செயல்பாடுகள் பிரச்னையை உருவாக்கியது. முக்கிய நிகழ்வுகளுக்கு வெறும் அறிக்கை வெளியிடுவதும், தலைவர்களுக்கு வீட்டில் புகைப்படம் வைத்து அஞ்சலி செலுத்துவதும் என அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தமிழகத்தில் பல பிரச்னைகள் இருக்க கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு நடிகை திரிஷாவுடன் தனி விமானத்தில் பயணம் செய்து பிரச்னைக்கு திரி கிள்ளி விட்டார். அப்போதில் இருந்தே விஜயின் அரசியல் செயல்பாடுகள் தற்போது ரசிகர்களிடம் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆடியோ விவகாரம்: தவகெ நிர்வாகி ஒருவரிடம் கட்சியின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசும் ஆடியோ சமீபத்தில் வெளியானது. அதில், கட்சி தலைவரான விஜய் சொல்வதை பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கேட்பதே இல்லை. அவர் தன்னையே முன்னிலைப்படுத்தி கொள்கிறார்.
வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் தவெக இரண்டு சதவீதம் கூட ஓட்டு வாங்காது எனவும் பேசி இருந்தார். இந்த ஆடியோ விவகாரம் முடிவதற்குள் தற்போது இன்னொரு ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜான் ஆரோக்கியசாமி கூறுகையில், விஜய் கடைசி ஆயுதமாக மேடமிடம் பேசினார்.
ஆனால் அவர்கள் கட்சி விஷயங்களில் தலையிட மாட்டேன் என விலகி விட்டாங்க. நமக்கு தேவையான போது செய்வான். ஆனா ஒரு கட்டத்தில் உங்களை ஒன்னும் செய்யாமல் காலி செய்துவிடுவான். அவன நம்பி போகாதீங்க.
புஸ்ஸி ஆனந்துக்கு பாண்டி முதல்வராக வேண்டும் என்று ஆசை. அவருக்கு பழக்கம் இல்ல என்றாலும் தலைவருக்கு ஊரில் இருக்கும் எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு. அது ஒரு பக்கம் பிரச்னையாகும் எனவும் பேசி இருக்கிறார். மீண்டும் ஆடியோ விவகாரம் தற்போது தவெக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.