தப்பு நடந்து போச்சி!. சாரி!.. லோகேஷ், ஐஸ்வர்யா வரிசையில் ஷங்கரும் வந்துட்டாரே!..
Gamechanger: ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேம்சேஞ்சர் திரைப்படம் குறித்து அவர் கொடுத்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேம்சேஞ்சர் திரைப்படம்: தமிழ் சினிமாவின் மிஸ்டர் பிரம்மாண்டம் என அழைக்கப்படுபவர் ஷங்கர். வித்தியாசமான கதைக்களம், ஆடம்பரமான செட்டுகள் என ஷங்கரின் திரைப்படம் இன்னொரு உலகத்தை ரசிகர்கள் கண்முன் காட்டும்.
அந்த வகையில் இந்தியன்2 மற்றும் கேம் சேஞ்சர் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருந்தது. ஆனால் இதற்கு முதல் இடியாக அமைந்தது இந்தியன்2 திரைப்படம் தான். கடந்த ஆண்டு அதிக அளவு ட்ரோல் மெட்டீரியலாக மாறியதும் அப்படம்தான்.
இந்த மிகப்பெரிய தோல்வியிலிருந்து கேம்சேஞ்சர் திரைப்படத்தின் மூலம் ஷங்கர் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை திரைக்கதையாக மாற்றி ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சராக அறிவிக்கப்பட்டது. தமிழ் ஹீரோக்கள் இல்லாமல் முதல் முறையாக தெலுங்கில் ராம்சரணை நாயகனாக மாற்றினார்.
இதனால் படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியது. படத்தின் பாடல் காட்சிகளுக்கு மட்டும் 90 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டது. ஒவ்வொரு பாடலுமே குறைந்தபட்சம் 10 கோடியை தாண்ட ரசிகர்கள் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் திரையரங்கிற்கு சென்றனர்.
ஆனால் படத்திற்கு உருவான அதிகபட்ச எதிர்பார்ப்பு படத்தின் மீதான அதிருப்தியை உருவாக்கியது. எப்போதும் போல சாதாரண கதையாகவே இருப்பதாகவும், பழசை ஈயம் பூசி தந்து இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
இதனால் தொடர்ச்சியாக படத்தின் வசூல் அடிவாங்கியது. இந்நிலையில் ஒரு பேட்டியில் ஷங்கர் கூறுகையில், எனக்கு இந்த படத்தில் திருப்தி இல்லை. இன்னும் நல்லா பண்ணி இருக்கலாமோ என்ற எண்ணம் இருக்கிறது. நிறைய நல்ல காட்சிகள் ட்ரிம் செய்யும் போது மிஸ் ஆகிவிட்டது.
எல்லாத்தையும் வைக்க முடியாது. ஆனால் எல்லாமே அதில் தான் வருது. படம் மொத்தமாக 5 மணி நேரத்தை தாண்டியது. சிலை செய்துக்க வேண்டும் என்றால் அதை மிஸ் பண்ணனும் என்றார். இதற்கு முன்னர் லால் சலாம் மற்றும் லியோ படமும் எதிர்பார்ப்பால் அதிருப்தியை சந்தித்தது.
அதுகுறித்து பின்னர் இயக்குனர்கள் கொடுத்த பேட்டியிலுமே இதே போலவே பேசினர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹார்ட் டிஸ்கே மிஸ் ஆகிவிட்டது என்றார். லோகேஷ் ஃபிளாஷ்பேக்கே பொய்யாக இருக்கும் என்றார். எடுக்கும் போதே சொதப்பி விட்டு பேட்டிக்களில் சமாளிப்பது கோலிவுட் இயக்குனர்களிடம் தொடர்கதையாக மாறி இருக்கிறது.