விஜயின் இடத்தை பிடிக்கப்போவது இவர்தான்!.. விக்ரமன் உடைச்சி பேசிட்டாரே!...

By :  MURUGAN
Published On 2025-07-07 12:33 IST   |   Updated On 2025-07-07 12:33:00 IST

Vijay: சினிமாவில் ஒரு பிரபலமான நடிகர் சினிமாவை விட்டு விலகும்போது அவரின் இடத்தை யார் பிடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு திரையுலகில் மட்டுமில்லாமல் ரசிகர்களிடமும் வரும். இப்போது விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு போவதாக அறிவித்திருக்கிறார். எனவே, அவரின் இடத்தை பிடிக்கப்போவது யார் என்கிற கேள்வி எல்லோரிடமும் எழுந்திருக்கிறது.

நாளைய தீர்ப்பு படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிய விஜய் கடந்த 30 வருடங்களாக சினிமாவில் அடித்து ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே சேர்த்து வைத்திருக்கிறார். நடிப்பு பெரிதாக இல்லை என்றாலும் தனது நடன அசைவுகள் மூலம் ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக மாறினார். விஜயை போல ஆட டேன்ஸ் முடியாது என சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் ஓப்பனாகவே சொன்னார்கள்.


விஜய் எப்படி இப்படி ஆடுகிறார் என நான் பல முறை ஆச்சர்யப்படுவதுண்டு என தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கூறினார். இந்த 30 வருடங்களில் விஜயை போல ஸ்டைலாக, லாவகமாக, என்ஜாய் பண்ணி டேன்ஸ் நடிகர் யாரும் வரவில்லை என தைரியமாக சொல்லலாம். துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்தாலும் ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார்.

ஏனெனில், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வேண்டுமெனில் ஆக்‌ஷன் கதைகளில் நடிக்க வேண்டும் என்பதுதான் விதி. ரஜினியெல்லாம் அப்படித்தான் சூப்பர்ஸ்டாரக மாறினார். ரஜினியின் ரூட்டில் பயணித்த விஜய் ஒருகட்டத்தில் ரஜினியை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு முன்னேறினார். ஆனால், இப்போது அரசியலுக்கு போவதால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கமாட்டேன் என சொல்லியிருக்கிறார்.


ஒருபக்கம் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் சமீபத்தில் பீனிக்ஸ் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் சூர்யா சேதுபதி ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கலக்கியிருக்கிறார். எல்லா காட்சிகளிலும் டூப் போடாமல் அவரே நடித்து அசத்தியிருக்கிறார். படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் ஆக்‌ஷன் காட்சிகளை பாராட்டி பேசுகிறார்கள்.

இந்நிலையில், சூர்யவம்சம், வானத்தை போல போன்ற படங்களை இயக்கிய விக்ரமன் ஊடகம் ஒன்றில் பேசும்போது ‘விஜய் சினிமாவில் நடிக்கமாட்டேன் என சொல்லிவிட்டார். அஜித்தோ கார் ரேஸில் கவனம் செலுத்துகிறார். விஷால் நிறைய இடைவெளி எடுக்கிறார். விஜயகாந்த் சாரும் இப்போது இல்லை. எனவே, ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

சூர்யா சேதுபதி இந்த இடைவெளியை நிரப்புவார் என எதிர்பார்க்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அந்த வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்பிவிட்டார். பீனிக்ஸ் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அசத்தலாக இருந்தது’ என அவர் கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News