இப்போ இசை போகிற இடம் எது தெரியுமா? இளையராஜா சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க..!

By :  Sankaran
Update:2025-02-08 15:45 IST
ilaiyaraja
  • whatsapp icon

இளையாராஜாவை மேஸ்ட்ரோ, இசைஞானி, ராகதேவன், இசைக்கடவுள்னு ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். இவரைப் போல தமிழ்த்திரை உலகில் யாரும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்க முடியாது.

பாடல்கள் ஒவ்வொன்றும் தேனமுதம். அவர் இசை எத்தனையோ பேருக்கு ஒரு ரிலாக்ஸான உணர்வைத் தருகிறது. வேலை செய்ய நினைப்பவர்களுக்கோ உற்சாகத்தைத் தருகிறது. காதல், கொண்டாட்டம், சோகம், வீரம், பரிதவிப்பு என பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது இந்த இசை.

விடுதலை: தற்போது கூட விடுதலை1, 2 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இப்போது உருவாகி வரும் திருக்குறள் படத்திற்கும் இசை அமைத்து வருகிறார். 83வயதிலும் ஆக்டிவாக இருக்கிறார் என்றால் அதற்கு அவரது இளமை மாறாத இசையே காரணம் என்று சொன்னால் மிகையில்லை. 

80ஸ் காலகட்டம்: இளையராஜாவின் பாடல்கள் 80காலகட்டத்தில் இருந்தே ரசிகர்களை ஆக்கிரமித்து விட்டன. எங்கு பார்த்தாலும் அவரது பாடல்கள்தான் ஒலிக்கும். அப்போதைய வானொலிகளில் பெரும்பாலும் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களையே அதிகம் ஒலிபரப்புவார்கள். அதேபோல அவர் இசையில் உருவான பெரும்பாலான படங்களும் சூப்பர்ஹிட் அடித்து விடும்.

2கே கிட்ஸ்: ரஜினி, கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ், மோகன், ராமராஜன், முரளி, ராஜ்கிரண் என பல முன்னணி நடிகர்களுக்கு இசை அமைத்துள்ளார். இப்போதும் அவரது இசைக் கச்சேரிகளுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் 2கே கிட்ஸ்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றே தெரிகிறது.


எவன் கை வச்சாலும் சத்தம் வரும்: அந்த வகையில் இன்றைய இசை குறித்து இளையராஜா சொல்வது என்னன்னு பாருங்க. கம்ப்யூட்டர்ல எவன் கை வச்சாலும் சத்தம் வரும். நீங்க சும்மா கை வைங்க கண்டிப்பா வரும். அதை எல்லாம் இசைன்னு சொல்லிட்டு இருந்தா நான் எப்படி நம்பறது?

80 பேர் உட்கார்ந்து மூச்ச இழுத்து புடிச்சி வாசிக்கிற அந்த கஷ்டம் கம்ப்யூட்டர்ல இல்ல. இசை முன்னோக்கி போகுற மாதிரி தெரியல. அதல பாதாளத்தை நோக்கிப் போயிட்டு இருக்கு என்கிறார் இசைஞானி இளையராஜா. 

Tags:    

Similar News