25வது நாளில் கோட் படத்தின் வசூல் நிலவரம்! ஜெயிச்சுட்ட மாறா.. அடுத்த வேலைய பார்ப்போம்
கோட் பட வசூல் நிலவரம்.. அண்ணன் எப்பவும் கில்லிதான்
கோட் படம் வெளியாகி நேற்றுடன் 25வது நாளை எட்டியிருக்கிறது. அதனால் 25வது நாளில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா ஆகியோர் நடித்த திரைப்படம் கோட். இவர்களுடன் இணைந்து பிரசாந்த் பிரபுதேவா லைலா அஜ்மல் மோகன் யோகி பாபு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் 25 ஆவது நாளான நேற்றுடன் படத்தின் மொத்த வசூல் நிலவரம் பற்றி சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. ஒட்டுமொத்தமாக கோட் திரைப்படம் 460 கோடி வரை வசூலித்திருப்பதாக தெரிகிறது.
அதில் இந்திய அளவில் மட்டும் 305 கோடி வரைக்கும் வசூவலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும்தான் அதிகமாக கோட் திரைப்படத்தின் வசூல் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டதட்ட 220 கோடி வரைக்கும் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் வசூல் சாதனையை அடைந்திருக்கிறது கோட் திரைப்படம்.
கேரளா மற்றும் கர்நாடகா இரண்டும் சேர்த்து 30 கோடியும் வெளிநாட்டு வசூலாக 165 கோடி வரைக்கும் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 500 கோடி வசூல் சாதனையை கோட் திரைப்படம் அடைந்திருந்தால் இதுதான் விஜயின் கரியரில் இரண்டாவது ஐநூறு கோடி வசூலை தாண்டிய திரைப்படமாக அமைந்திருக்கும்.
அந்த சாதனையை கோட் திரைப்படத்தால் பெற முயலவில்லை .மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் கோட் திரைப்படத்தை ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். அதற்கு காரணம் படத்தில் அமைந்த மல்டி ஸ்டார் நட்சத்திரங்கள் மற்றும் அஜித்தின் ரெஃபரன்ஸ்கள் தல தோனியின் ரெபரென்ஸ்கள் இவைகள் தான் காரணம்.
இதுதான் ஒரு வேளை மற்ற மாநிலங்களில் படத்தை கொண்டு போகாததற்கும் ஒரு காரணமாக அமைந்திருக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டு ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் போல அமைந்திருந்தது.