கோட் விஜய்யை போட்டுத்தாக்கிய ஓஜி சம்பவம்!.. ஆதிக் காட்டுத்தனம்!.. குட் பேட் அக்லி பாட்டு எப்படி?..
துப்பாக்கி, பீரங்கி எல்லாம் வந்தாலும் ஓஜி சம்பவம் செய்யும் என பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள நிலையில், துப்பாக்கி விஜய் மற்றும் கோட் விஜய்யை டைரக்ட் அட்டாக் செய்துள்ளார் அஜித் குமார் என்கின்றனர்.;
அட்டகாசம் படத்தில் “உனக்கென்ன உனக்கென்ன” பாடலை போட்டு விஜய்க்கு எதிராக அஜித் சம்பவம் செய்ததை போல மீண்டும் ஒரு சம்பவத்தை ஓஜி சம்பவம் பாடல் மூலம் செய்திருக்கிறார். கோட் என விஜய் கடந்த ஆண்டு படம் நடித்த நிலையில், அதன் கிளைமேக்ஸில் ஒஜி என ஒரிஜினல் கேங்ஸ்டராக வந்திருப்பார். தற்போது அஜித் குட் பேட் அக்லி படத்தில் ஒஜியாக வருகிறார்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடலே ஒஜி சம்பவம் என்கிற பெயரில் தான் உருவாகியுள்ளது. போதாக்குறைக்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரும் ஸ்டூடியோவில் மைக்கை மாட்டிக் கொண்டு காட்டுத்தனமாக கத்தி பாடுகிறார்.
தொண்டையெல்லாம் கிழியப் போகிறது என ஜி.வி. பிரகாஷ் குமார் ஏற்கனவே ப்ரோமோவில் சொன்ன நிலையில், அந்த லெவலை தாண்டி அஜித்துக்காக ரியல் ஃபேன் பா நான் என கத்தி பாடியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அஜித் குமாரின் அனைத்து கேங்ஸ்டர் படங்களில் இருந்தும் ஒரு தரமான சம்பவத்தை ரசிகர்களுக்கு டைம் டிராவல் செய்தது போல குட் பேட் அக்லி படத்தில் கொடுத்து ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று அஜித்தை எப்படி பார்க்க ஆசைப்படுகிறார்களோ அந்த விஷயத்தை 100 சதவீதம் பூர்த்தி செய்யும் விதமாக ஆதிக் கொடுத்திருப்பார் என்பது இந்த பாடலை பார்த்தாலே தெரிகிறது.
துப்பாக்கி, பீரங்கி எல்லாம் வந்தாலும் ஓஜி சம்பவம் செய்யும் என பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள நிலையில், துப்பாக்கி விஜய் மற்றும் கோட் விஜய்யை டைரக்ட் அட்டாக் செய்துள்ளார் அஜித் குமார் என்கின்றனர்.