வாரணம் ஆயிரம் படத்தில் முக்கிய நடிகையை மறுத்த சூர்யா… லிஸ்ட் பெருசா இருக்கே!
Varanam Ayiram: சூர்யா நடிப்பில் சூப்பர்ஹிட் திரைப்படமான வாரணம் ஆயிரம் படத்தின் நீங்க மிஸ் பண்ணவே கூடாத சூப்பர் விஷயங்கள் இருக்கிறது.
ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வாரணம் ஆயிரம். இப்படத்தில் சூர்யா, சமீரா, சிம்ரன், ரம்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இரட்டை வேடத்தில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
ஏற்கனவே கௌதம் மேனனுடன் சூர்யா கூட்டணி போட்ட காக்க காக்க திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இருவரும் அடுத்து சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் இணைந்தனர். அப்படம் நடக்காமல் போக அந்த நேரத்தில் உருவானது தான் வாரணம் ஆயிரம் திரைப்படம்.
மேலும் கௌதம் மேனனின் வாழ்க்கை கதையாக தான் இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார். அவருக்கும், அவர் அப்பாவுக்கும் இடையிலானா பாசத்தை அழகாக காட்டி இருப்பார். தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக சிக்ஸ் பேக் கலாச்சாரத்தை இந்த படத்தின் மூலம் கொண்டு வந்தார் சூர்யா.
இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதற்கு முன்னர் அப்பா வேடத்தில் நடிக்க மோகன்லால் மற்றும் நானா படேகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் நானா படேகர் தன்னுடைய பலமே வாய்ஸ் தான் அதுக்கு டப்பிங் பண்ணுவீர்களே என நழுவி விட்டார். மேலும் அப்பா வேடத்துக்கு இளமையாக இருக்க வேண்டும் என்பதால் சூர்யாவே அந்த வேடத்தில் நடிக்க முடிவெடுத்து இரட்டை வேடமாக நடித்தார்.
அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் ரம்யா நடித்த வேடத்தில் நடிக்க முதலில் பிரபல நடிகை தீபிகா படுகோனேவை பேசி இருக்கின்றனர். அவர் ஹிந்தியில் பிசியாக இருந்ததால் முடியாமல் போனது. பின்னர் ஆண்ட்ரியாவிடம் பேச அவரும் சில காரணங்களால் விலகினார். அதையடுத்து அசின் அந்த ரோலுக்கு வர சூர்யா வேண்டாம் என மறுத்து விட்டாராம். அதை தொடர்ந்தே அந்த ரோலுக்கு வந்திருக்கிறார் ரம்யா.
அதே போல, சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜெனிலியா. ஆனால் அவரும் சில காரணங்களால் விலக தமிழில் முதல்முறையாக அறிமுகமானார் சமீரா ரெட்டி. இப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்தது. சூர்யாவின் கேரியரில் முக்கிய படமான வாரணம் ஆயிரம் 2008க்கான தேசிய விருதையும் பெற்றது.