என்னது ஜெயம் ரவிக்கு கெனிஷாவுடன் ரகசிய திருமணமா? ஆனா ஆர்த்தி கையில தான் இருக்கு ஆப்பு?!
ஜெயம் ரவி ஆர்த்தி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆர்த்தி கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவர். திடீர்னு இருவரும் பிரிந்தனர். ஜெயம் ரவி ஒரு ஜென்டில்மேன் தான். ஆனா அவர் என்னை வைஃப் டார்ச்சர் பண்றாங்க. எந்த ஓட்டல்ல தங்கிருக்காரு, எப்போ வருவாரு? இப்படி எல்லாம் டார்ச்சர் பண்றாங்க.
பேங்க் அக்கவுண்ட்ல என்னோட பணத்தை எல்லாம் அவங்க அக்கவுண்டுக்கு மாத்துறாங்க. மனைவி, மாமியார் கணக்கு கேட்குறாங்க. அவங்க சொல்ற படத்துல தான் நடிக்க வேண்டி இருக்கு. இப்படி மிகப்பெரிய டார்ச்சர் பண்றாங்க. அதுமாதிரி ஜெயம்ரவி பக்கம் உள்ள பிரச்சனையையும் ஆர்த்தி கிளப்புறாங்க. சைரன் படத்துக்கு அப்புறம் தான் இந்தப் பிரச்சனை வெடிக்க ஆரம்பிச்சது.
குடும்பத்துல இப்படி பிரச்சனை வந்ததும் ஜெயம்ரவியால சினிமாவுலயும் முழுமையா கவனம் செலுத்த முடியல. திடீர்னு கோவா போயிடுறாரு. அங்கு கென்யா பாடகி கெனிஷாவுடன் இணைந்து ஜாலியா சுத்துறாரு. கேட்டா அவங்க மன அழுத்தத்தைப் போக்குற தெரபிஸ்ட்னு சொல்றாரு.
என்னுடைய மன அழுத்தத்துக்கு அவரை சந்திச்சேன். அவருதான் ட்ரீட்மெண்ட் கொடுத்தாரு. இப்ப அவங்களும், நானும் சேர்ந்து இந்த தெரபிஸ்ட் சம்பந்தமா பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்னு சொல்றாரு. கெனிஷா யாருன்னா அவங்க ஒரு மாடலிங். கிளாமர் டான்ஸ் ஆடுற ஒரு மேடைப்பாடகி. அவங்க அந்தக் கலாச்சாரத்துல வாழ்றாங்க. ஜெயம் ரவியும் அதுக்குள்ள போயிட்டார்.
மீண்டு வருவாரான்னு தெரியல. சமீபத்தில் ஐசரி கணேஷின் இல்லத் திருமணவிழாவில் கெனிஷாவுடன் இணைந்து கைகோர்த்தபடி ஜெயம்ரவி என்ட்ரி கொடுக்கிறார். இது வைரலானது. அதைப் பார்க்கும்போது கண்டிப்பா அடுத்த மேரேஜ்க்கு ஜெயம் ரவி தயாரா ஆகிட்டாரோன்னு பலரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.
இந்த நேரத்துல ஆர்த்தி அதை நடக்க விடாம ஒரு அறிக்கை விடுறாங்க. அதுல எனக்கு 2 பிள்ளைங்க இருக்காங்க. அவங்க வளர்ச்சிக்காகத் தான் நாம் மௌனமா இருந்தேன். ஜெயம் ரவி சொன்ன வாக்குறுதி படி நடக்கல. இனியும் நான் மௌனமா இருக்கேன்னா அதுக்குக் காரணம் கோர்ட்ல விவாகரத்து வழக்குப் போய்க்கிட்டு இருக்குன்னு சொல்றாங்க.
அந்த வகையில் ஆர்த்தி நாங்க மீண்டும் சேர்ந்து வாழ விரும்புறோம்னு சொல்லிட்டாங்கன்னா ஜெயம் ரவி கெனிஷாவுடன் நினைச்ச மாதிரி சேர்ந்து வாழ முடியாது. ஜெயம் ரவி தரப்புல என்ன சொல்றாங்கன்னா 100 சதவீதம் விவாகரத்து ஓகே ஆகிடும்கறாங்க. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேற்கண்ட தகவலை மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.