Pandian Stores2: செந்தில் செய்ததை மறைக்கும் மீனா… கோமதியின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பம்!

By :  AKHILAN
Published On 2025-07-05 10:02 IST   |   Updated On 2025-07-05 10:02:00 IST

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

வீட்டில் கோமதி மற்றும் மீனா பேசிக் கொண்டிருக்கின்றனர். உன் மேல நான் எவ்வளவு பாசம் வச்சிருந்தேன். என் பொண்ண விட அதிகமா உன்ன தான் நேசிச்சேன். எல்லா விஷயமும் உன்னிடம் வந்து தான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

இதை என்னிடம் நீ ஏன் சொல்லவில்லை என கோமதி கேட்கிறார். வீட்டில் மற்ற பிரச்சனைகள் நடந்தது அதனால் சொல்லவில்லை எனக் கூற, சரி நேத்து வேலை கிடைச்சுச்சு இல்ல அப்ப கூட இதை ஏன் சொல்லல எனக்கு கேட்க மீனா தடுமாறுகிறார்.

உன்னுடைய அலுவலகத்தில் வாங்கிய வடையில் உப்பு குறைந்தது கூட நீ என்னிடம் சொல்லி இருக்க, ஆனா இதே மாதிரி பெரிய விஷயத்தை என்கிட்ட சொல்ல எனக்கு தகுதி இல்லை என்று நினைத்துவிட்டாயோ என்னவோ என கோமதி மீனாவை கடுமையாக சாடிவிட்டு என்று சொல்கிறார். 

 

இதில் மீனா அழுது கொண்டிருக்க தங்கமயில் அத்த கேக்குறதுல எந்த தப்பும் இல்லை மீனா. எங்களை விட உன்மேல தான் அவங்க ரொம்ப பாசமா இருந்தாங்க என்கிறார். ஆனால் ராஜி நீங்களும் ஏன் அக்கா. மீனா அக்கா மறைச்சாங்கனா அதுல ஒரு காரணம் இருக்கு என்கிறார்.

வீட்டில் அப்பத்தா மற்றும் அரசி இருவரும் பேசிக் கொண்டிருக்க பழனி அங்கு வருகிறார். வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா மாமா என அரசி தீர்க்க நீ பண்ணிட்டு போனதுக்கு எப்படி நல்லா இருப்பாங்க. எதோ நல்ல விஷயம் நடக்கிறதால் இருக்காங்க என்கிறார்.

அப்பத்தா சரவணன் பொண்டாட்டிக்கு சத்தான ஆகாரமா செஞ்சி கொடுக்க சொல்லுடா என்கிறார். அக்கா நல்லாதான் பாத்துக்குது என்கிறார் பழனி. பின்னர் செந்திலுக்கு அரசு வேலை கிடைச்ச விஷயத்தையும் சொல்ல அப்பத்தா மற்றும் அரசி சந்தோஷப்படுகின்றனர்.

மறுபக்கம் எல்லாரும் சாப்பிட உட்கார்ந்து இருக்க செந்தில் மற்றும் மீனா மட்டும் இல்லாமல் இருக்கின்றனர். ராஜி அக்கா இல்லாம நல்லாவே இல்ல என்கிறார். பாண்டியன் நான் யாரையும் சாப்பிட வரக்கூடாதுனு சொல்லலையே என்கிறார்.

கதிர் சென்று செந்தில் மற்றும் மீனாவை அழைத்து வர அவர்களுடன் பழனி பேசி கலாய்த்து கொண்டு இருக்கிறார்.

Tags:    

Similar News