3 BHKல ஹீரோ சரத்குமாரா, சித்தார்த்தா? இது படமா, விளம்பரமா? புளூசட்டை மாறன் விமர்சனம்
ஸ்ரீகணேஷ் இயக்கிய 3பிஎச்கே நேற்று வெளியானது. சரத்குமார், சித்தார்த், மீரா ரகுநாத், தேவயானி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் விமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
படத்துல சரத்குமார் சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலி மேன். அவருக்கு ஒரு பொண்ணு. ஒரு பையன். சாதாரணமா மிடில் கிளாஸ் ஃபேமிலில என்ன நினைப்பாங்க? எப்பாடுபட்டவாது புள்ளைங்களை நல்லா படிக்க வச்சிரணும். அவங்களை எப்படியாவது ஒரு நல்ல வேலைல சேர்த்து விடணும். எப்படியாவது வாழ்நாள்ல சொந்தமா ஒரு வீடு வாங்கிடணும்னு நினைக்கிறாரு ஹீரோ. இந்த நியாயமான ஆசை நிறைவேறுச்சா இல்லையாங்கறதுதான் படத்தோட கதை.
முடிஞ்சளவு இயக்குனர் இந்தக் கதையை நேர்க்கோட்டுல சொல்லிருக்காரு. இந்தப் படத்தோட பிளாட்டே ரொம்ப ஈசியா நம்மை எல்லாரையும் கனெக்ட் பண்ணிடுது. குடும்பத்தோட கஷ்டம், பிள்ளைங்க படிக்கிற விதம், வாடகை வீட்டுல இருக்குற பிரச்சனைகள், அதை எப்படி சமாளிக்கிறாங்க?
பணத்தை சேமிக்க எப்படி முயற்சிக்கிறாங்க? இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பர்ஸ்ட் ஆஃப்ல ரொம்ப கரெக்டா சொல்லிருக்காங்க. ஆனா செகண்ட் ஆஃப்ல இவங்களே குழப்பி வச்சிருக்காங்க. பர்ஸ்ட் ஆஃப்க்கு உண்டான செகண்ட் ஆஃப்பா படம் இல்லை. கதையை விட்டு விலகி எங்கெங்கோ போகுது.
தேவையில்லாம பொண்ணோட குடும்பப் பிரச்சனை, பையன் தேர்ந்தெடுத்த தொழில் சரியில்லன்னு குழப்பம்னு கதை போகுது. இதுல ஹீரோ சரத்குமாரா, சித்தார்த்தாங்கற குழப்பம் வருது. மிடில்கிளாஸ்ல இருக்குற சரத்குமார் அவ்ளோ கஷ்டத்துலயும் பிள்ளைங்களை எப்படி படிக்க வச்சாரு? வளர்த்தாருன்னு சொல்றது நியாயமாகத் தான் இருக்கு.
ஆனா கதையில என்ன சொல்ல வர்றாங்கன்னா அவரு எடுத்த தப்பான முடிவுல தான் பிள்ளைங்க வாழ்க்கை கெட்டுச்சுன்னும் அதனால தான் வாழ்க்கையை அவங்களே மாத்தி அமைச்சாங்கன்னும் கொண்டு போயிருக்காங்க. இது ரொம்ப குழப்பமாயிருக்கு. படத்தை உண்மைக்கு நெருக்கமா எடுக்குறேன்னு நாடகம் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க.
அதிலும் கிளைமாக்ஸை எல்லாம் பார்க்கும்போது பெரிய அதிர்ச்சியா இருந்தது. நாம இவ்ளோ நேரம் பார்த்தது விளம்பரமா? அப்படின்னு தோணுது. எல்லாருக்கும் கனெ;டாக்குற கதையை வச்சிட்டு யாருக்குமே கனெக்டாகாத படத்தை எடுத்து வச்சிருக்காங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.