தனுஷூக்குச் சொன்ன கதையில சிம்பு... அட இதுதான் காரணமா? பிரபலம் சொன்ன அந்த தகவல்

By :  SANKARAN
Published On 2025-07-05 15:23 IST   |   Updated On 2025-07-05 15:23:00 IST

தனுஷூக்காகச் சொன்ன வடசென்னை 2 கதையில் தான் சிம்பு நடிக்கிறாரா? இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன சொல்றாருன்னு பாருங்க.

வெற்றிமாறனுக்கும், தனுஷூக்கும் ஆழமான ஒரு புரிதலுடன் கூடிய நட்பு உண்டு. தனுஷ் தான் உதவி இயக்குனராக இருந்த வெற்றிமாறனை இயக்குனராக்க வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து முன்னணி இயக்குனர் ஆக்கினார்.

அதே நேரம் வெற்றிமாறன் தான் தனுஷூக்கு 2 தேசிய விருதுகள் கிடைக்கச் செய்தார். அந்த வகையில் இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. வடசென்னை படத்தில் தனுஷ் ஜெயிலுக்குப் போயிடுறாரு. அதுக்கு அப்புறம் வெளியே என்ன நடக்குதுங்கற கதையை சிம்புவை வைத்து எடுக்கலாம்னு நினைக்கிறாங்க.

அதேநேரம் வட சென்னையில வர்ற கேரக்டர்களும் இந்தக் கதையில வர வாய்ப்புகள் இருக்கு. அப்படி வரும்போது லோகேஷோட LCU மாதிரி இது VCUவா மாறும்.

அதே நேரம் வடசென்னை எடுக்கும்போது இருந்த கேரக்டர்களை வைத்து இப்போ படம் எடுத்தா அவங்க முகம் எல்லாம் மாறிப்போய் இருக்கும். அது கேலியாகி விடுமோ என்ற கேள்வியும் எழுகிறது. அதனால மொத்தமாவே கதையை மாற்றிவிடும் சூழலும் இருக்கு. ஆனா இது எதுவுமே தெரியாம தனுஷ் Rs.20 கோடி கேட்டாருன்னு பலரும் சொல்றாங்க.


வெற்றிமாறன் இதுவரை எந்த சர்ச்சைக்கும் பதில் சொன்னதே இல்லை. சிம்புவைப் பொருத்தவரை அவருக்கு ஒரு வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதனால இந்தப் படம் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்கிறது. அதுமட்டும் அல்லாமல் தனுஷூம் பெருந்தன்மையாக எப்படி வேணாலும் வடசென்னை படத்தைப் பயன்படுத்திக்கோங்கன்னு சொல்லிவிட்டாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

சிம்பு தக் லைஃப் படத்தை பெரிதும் நம்பினார். ஆனால் அது பிளாப் ஆனது. அந்த வகையில் மாநாடுக்குப் பிறகு சிம்புவுக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் பெரிய ஹிட் இல்லை. அதனால் இப்போது அவரும் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய நிலைமையில் உள்ளார்.

அதனால்தான் வெற்றிமாறனிடம் இருந்து வாய்ப்பு என்றதும் ஓகே சொல்லி விட்டாராம். சிம்புவுக்குப் பிறகு வந்த சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் எல்லாம் உச்சத்துக்குச் சென்று விட்டார்கள் என்பதாலும் சிம்பு இப்போது சினிமாவில் தீவிரமாகக் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாராம். 

Tags:    

Similar News