ஒரு படம் ஓடுனதும் இவருக்கு ஏன் இந்த வீண்வேலை… இணையத்தில் கலாய் வாங்கும் டூரிஸ்ட் ஃபேமிலி டைரக்டர்!

By :  AKHILAN
Published On 2025-07-05 12:29 IST   |   Updated On 2025-07-05 12:29:00 IST

Tourist Family: தற்போது தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களுமே பெரிய அளவில் வரவேற்பு பெற்று வரும் நிலையில் இன்னொரு சம்பவமும் அசராமல் செய்து வருகின்றனர்.

பொதுவாக சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் எல்லாருக்குமே நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். அதுவும் ஹீரோவாக ஒரு வாய்ப்புக்காகவே இன்னும் பலர் ஏங்குகின்றனர். இசையமைப்பாளராக இருந்து நடிகராக, காமெடியனாக இருந்து நடிகராக மாறி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனராக இருந்தவர்களும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுந்தர்.சி, பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் தெரிந்த முகங்களாகி இருக்கின்றனர். இந்த லிஸ்ட்டில் தற்போது இணைந்து இருக்கிறார் டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன்.

இவர் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் சூப்பர்ஹிட் அடித்தது. அதிலும் படம் வசூலும் அதிகரித்தது. தற்போது ஓடிடியில் வெளியாகி கூட படத்திற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. 

 

இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குனரான அபிஷனும் நடித்து இருந்தார். அவருடைய கேரக்டர் பலரை கரைய வைத்தது. படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய நீண்டகால தோழியிடம் காதலினை சொல்லி வேறு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக அபிஷன் அறிமுகமாக இருக்கிறாராம். அனஸ்வரா ராஜன் நடிக்கும் இப்படத்திற்கு கரெக்டட் மச்சி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இப்படி ஒரு நல்ல இயக்குனரும் நடிக்க வந்துட்டா யார் இயக்குவா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News