TheGoodWife: பரபரப்பெல்லாம் இல்ல!... பிரியாமணி மட்டும்தான்!... குட் வைஃப் வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
TheGoodWife: அமெரிக்காவின் ஹிட் வெப்சீரிஸான தி குட் வைப் வெப்சீரிஸை தழுவி தமிழில் வெளியாகி இருக்கிறது தி குட் வைஃப் சீரிஸ். இது எப்படி இருக்கு என்ற பாசிட்டிவ், நெகட்டிவ் பேசும் திரைவிமர்சனம் இங்கே.
பிரபல நடிகை ரேவதி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தி குட் வைஃப் சீரிஸில் பிரியாமணி, சம்பத் ராஜ், ஆதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைட்டில் சொல்வது போலவே நாயகியை மையமாக வைத்து முழு சீரிஸும் நகர்ந்து இருக்கிறது.
மிகப்பெரிய அட்டர்னியாக இருக்கும் சம்பத் ராஜுடைய திருமண நாளில் ஆபாச படம் வெளியாகி அதிர்ச்சி கொடுக்கிறது. இதில் அவர் மாநிலத்திற்கு எதிராக செயல்பட்டு லஞ்சம் வாங்கியதாக சொல்லிப்பட்டு கைதும் செய்யப்படுகிறார்.
இவரின் மனைவி பிரியாமணி வக்கீல் என்றாலும் அவர் கொஞ்ச நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. கணவர் இல்லாததால் குடும்பத்திற்காக வேலைக்கு செல்கிறார். ஆனால் கணவரை அறிந்த யாரும் பிரியாமணிக்கு வேலை கொடுக்கவில்லை.
முன்னாள் காதலரான ஆதி பிரியாமணிக்கு வேலை தருகிறார். அங்கிருந்து தன்னுடைய வக்கீல் பயணத்தினை தொடங்குகிறார். கிடைக்கும் வாய்ப்பில் தன்னை பிரியாமணி பல இடங்களில் நிரூபிக்கிறார். அவர் சிரிக்கும் போது சிரிக்கவும், அழுகும் போது அழுகவும் வைக்கிறார்.
இதில் கணவரை நம்ப மறுத்தாலும் கடைசியில் அவருக்கு உதவி செய்து அவரை வெளியில் அழைத்து வருகிறார். சம்பத் ராஜ் இதுவரை முழுக்க முழுக்க வில்லனாக பார்த்தவரை பல இடங்களில் ரொமான்ஸ் பேசும் போது சொக்க வைக்கிறார்.
ஆதிக்கு பெரிய ஸ்பேஸ் இல்லை என்றாலும் கிடைத்த இடத்தில் சரியாக நடித்து ஸ்கோர் செய்கிறார். பெரிய கதை பரபரப்பு இல்லாமல் ஒரு ஃபீல் குட் அளவு மட்டுமே இதை பார்க்கலாம். பல இடங்களில் கதை எங்க வருது எங்க போகுது என நம்மாலையே சொல்ல முடியவில்லை.
நிறைய கிளை கதைகளை எங்கு ஆரம்பிப்பது என தெரியாமல் திணறி இருப்பது தெரிகிறது. பிரியாமணி நடிப்புக்காக இந்த வெப்சீரிஸை ஒருமுறை பார்க்கலாம். ஆனால் ஒரிஜினலில் இன்னும் ஆறு சீசன் இருப்பதால் இது தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.