இமேஜை சரி பண்ண ரவி மோகன் பார்த்த வேலை!.. அந்த லிஸ்ட்ல இவரும் சேர்ந்துட்டாரே!..
Jayam Ravi: நடிகர் ரவி மோகன் கோலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஜெயம் படம் மூலம் நடித்தவர் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் என்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம். ரவி மோகன் என அழையுங்கள் என கேட்டுக்கொண்டார். ஆர்த்தி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகன்களும் உண்டு.
சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். சினிமா உலகில் விவாகரத்து என்பது சாதாரணமானது என்றாலும் ரவி இதை செய்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், எந்த நடிகையோடும் தொடர்புபடுத்தி அவரைப்பற்றி கிசுகிசு வெளியாகவில்லை.
தனது மனைவி ஆர்த்தி தன்னை சந்தேகப்படுவதாகவும், தன்னுடைய வங்கி கணக்கு, ஏடிஎம், சமூகவலைத்தள கணக்குகள் என எல்லாவற்றையும் அவரே நிர்வகிப்பதாக புகார் சொன்னார் ரவி. மேலும், தன்னை வைத்து படங்களை எடுத்த தனது மாமியார் பொய்க்கணக்கு காட்டி தன்னை கடனாளியாக்கியதாகவும் சொன்னார்.
மனைவியின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் தனிமையில் இருந்தார் ரவி. தனது கணவரை தொடர்புகொள்ளமுடியவில்லை என ஆர்த்தி கூறினார். ஒருபக்கம் கோவாவில் ஹீலிங் சென்டர் என சொல்லப்படும் மனநல சிகிச்சை மையம் நடத்தி வரும் கென்னிஷா என்பவரோடு ரவிக்கு பழக்கமானது. அவருக்காகவே ரவி ஆர்த்தியை விவகாரத்து செய்கிறார் என செய்தி பரவ ‘ஒருவரை பற்றி தவறாக பேசாதீர்கள்’ என சொன்னார் ரவி.
இந்நிலையில்தான், சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் கெனிஷாவும், ரவியும் ஜோடியாக கலந்துகொண்டனர். எனவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்று பலரும் பேசினார்கள். அதோடு, இன்று வெளியிட்ட அறிக்கையிலும் மனைவி ஆர்த்தி மீது பல குற்றச்சாட்டுகளை சொன்னார் ரவி. என் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. என்னை வெறும் பணம் காய்க்கும் மரமாகவே என் மாமியாரும், மனைவியும் பயன்படுத்தினார்கள். ஒரு கணவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆர்த்தி கொடுக்கவில்லை. அவர் எப்போதும் என் முன்னாள் மனைவி மட்டுமே. என் மனைவியைத்தான் விவகாரத்து செய்திருக்கிறேன். என் குழந்தைகளை இல்லை’ எனப்பேசினார். மேலும், எனக்கு அழகான துணை கெனிஷா எனவும் உறுதி செய்தார்.
ரவியின் முடிவை ஆண்களில் பலரும் வரவேற்றாலும் பெண்களில் பலர் விமர்சித்து வருகிறார்கள். 2 குழந்தைகளை மனைவியிடம் விட்டுவிட்டு இன்னொரு பெண்ணிடம் ரவி சுற்றிக்கொண்டிருக்கிறார் என அவரை திட்டி வருகிறார்கள். இதை புரிந்துகொண்ட ஜெயம் ரவி சமூகவலைத்தளங்களில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் இன்ஃப்ளூசர்களை வைத்து ரவி - கெனிஷா ஜோடியை பற்றி நேர்மறையாக கருத்துக்களை பதிவிட சொல்லியிருக்கிறாராம்.
இதையடுத்து அவர்களும் ரவி - கெனிஷா அழகான ஜோடி, ரவி மோகன் செய்தது சரிதான், இது அவரின் வாழ்க்கை, அவரின் முடிவு என்கிற ரீதியில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.