Jayam Ravi: பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்விய 'பிரதர்'.. ஜெயம் ரவியின் நிலை என்ன?..
Jayam Ravi: தீபாவளி பண்டிகைக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவராத நிலையில் அமரன், பிளடி பெக்கர், பிரதர், லக்கி பாஸ்கர் படங்கள் வெளியாகின. இதில் லக்கி பாஸ்கர் தவிர்த்து மற்ற மூன்று படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
விவாகரத்து பிரச்சினைகளுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது. குறிப்பாக பூமிகா நீண்ட நாட்கள் கழித்து முக்கிய வேடத்தில் நடித்திருந்ததும் இதற்கு காரணமாகும்.
ஆனால் இயக்குனர் ராஜேஷ் புளிச்ச மாவையே மீண்டும் புளிக்க வைத்திருந்தார். அவரின் முந்தைய படங்களை மிக்சியில் போடு அடித்து அதை வடிகட்ட நேரமின்றி அவசர கோலத்தில் அள்ளித் தெளித்திருந்தார். சரண்யாவை இங்கிலீஷ் பேச வைத்தது. விடிவி கணேஷை காமெடிக்கு பயன்படுத்திய என ராஜேஷின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
படத்தின் ஒரே ஆறுதல் மக்காமிஷி பாடல் தான். இந்தநிலையில் பாக்ஸ் ஆபிஸில் படத்தின் வசூல் என்ன என்பது தெரிய வந்துள்ளது. படத்தின் விமர்சனம் மோசமாக இருந்தாலும் கூட பேமிலி ஆடியன்ஸ் படத்தினை கைவிட்டு விடவில்லை. தாங்கிப்பிடித்து இருக்கின்றனர். இதுவரை 8 கோடி ரூபாயை பிரதர் ஈட்டி இருக்கிறது.
மேலும் கவினின் பிளடி பெக்கர் படத்தையும் வசூலில் ஓவர்டேக் செய்துள்ளது. கவின் படம் இதுவரை பாக்ஸ் ஆபிசில் 6.5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜாலியாக ஒரு படம் என்பவர்களுக்கு பிரதர் நல்ல சாய்ஸ் என்பதால் இந்தளவு அப்படம் வசூல் செய்திருக்கிறது.