எப்படிப்பட்ட வரிகள்!. ஜெயம் ரவியா இப்படி எல்லாம் பேசுறது? தத்துவங்க... தத்துவம்!

பணம் குறித்து ஜெயம் ரவி உதிர்த்த தத்துவம் இது.

By :  sankaran
Update: 2024-10-13 09:11 GMT

வாழ்க்கையில அடிபட்டா தான் தத்துவமா வரும்னு சொல்வாங்க. அது உண்மை தான் போல. எல்லோருமே வெற்றி தோல்விகளைக் கடந்து தான் வரணும். அதுதான் இயற்கை நியதி. அது எவ்ளோ பெரிய பணக்காரனா இருந்தாலும் சரி. ஏழையா இருந்தாலும் சரி. விட்டு வைக்காது.

நடிகர் ஜெயம் ரவி விஷயத்திலும் அதான் உண்மை. அவர் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமண பந்தத்தில் சோபிக்க முடியவில்லை. காரணம் குடும்பப் பிரச்சனை. விவாகரத்து அளவில் வந்துவிட்டது. ஜெயம் ரவிக்கு சைரன் படத்திற்குப் பிறகு படங்கள் வரிசையாக உள்ளன. தற்போது பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இது தவிர ஜெனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களும் கியூவில் நிற்கிறது. சமீபகாலமாக ஜெயம் ரவி முற்றும் துறந்த ஞானியாகி விட்டாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. ஒரு பொருளைத் தொலைத்து விட்டால் குப்பையைக் கிளறாதீர்கள். எங்கு போட்டீர்களோ அங்கு தேடுங்கள் என்றும் சொல்லி இருக்கிறார்.


அதே போல பணம் பற்றியும் தத்துவம் உதிர்த்துள்ளார். அது என்னன்னா... இதைப் படிச்சிப் பார்த்தா எவ்ளோ பெரிய வார்த்தையை இவ்ளோ ஸ்வீட் அண்ட் ஷார்ட்டா சொல்லிட்டாரேன்னு எண்ணத் தோன்றும். 3 கோடி ரூபா கார்ல போறோமா, இல்ல... 1 லட்ச ரூபா கார்ல போறோமாங்கறது தான் பணம் முடிவு பண்ணுமே தவிர எதுல போகணும்கறது நம்ம சாய்ஸ் தான்.

பணம் வசதிக்குத்தான் முக்கியம். வாழ்க்கைக்கு முக்கியம் கிடையாது. நாம் உயிர் வாழ என்ன அடிப்படை தேவையோ அது இருந்தா போதும். இருக்குறது வெச்சு உன்னால சந்தோஷமா வாழ முடியலைன்னா எவ்ளோ வந்தாலும் உன்னால சந்தோஷமா இருக்க முடியாது. பணம் இருந்தா ஸ்டார் ஓட்டல். இல்லன்னா கையேந்தி பவன் என்கிறார் ஜெயம் ரவி.

அது மட்டுமல்லாம, பணத்தை நான் குழந்தைல அதிகம் பார்த்துட்டேன். எனக்கு பெருசா அதுமேல ஈடுபாடு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News