விஜய் மகன் சஞ்சயின் சம்பளம்!.. கொஞ்சமாவது அறிவு வேணாமா?.. பொங்கி எழுந்த அந்தணன்!..
விஜயின் மகன் சஞ்சயின் சம்பளம் குறித்து வெளியான தகவலுக்கு சினிமா விமர்சகர் அந்தணன் பதில் அளித்து இருக்கின்றார்.
நடிகர் விஜய்:
தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய். ஒரு படத்திற்கு 250 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார். தற்போது தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். மேலும் தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் தான் இவரின் கடைசி படம் என்று கூறப்படுகின்றது.
இயக்குனர் சஞ்சய்:
நடிகர் விஜய்யின் மூத்த மகன் சஞ்சய். இவர் வெளிநாடுகளில் படித்து முடித்துவிட்டு தனது தந்தையை போல் நடிப்பில் ஆர்வம் காட்டாமல் தாத்தாவைப் போல் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகின்றார். லைக்கா நிறுவனத்திடம் கதை கூறி ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதற்கு தயாராகி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் சந்திப் கிஷன் நடிக்க இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
தந்தை விலகல் மகன் என்ட்ரி:
தந்தையான நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்று முடிவெடுத்திருக்கும் நிலையில் மகன் இயக்குனராக என்ட்ரி கொடுத்திருக்கின்றார். தனது தந்தையின் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தனது சொந்த காலில் நின்று சாதித்து காட்ட வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றார் சஞ்சய்.
படத்தின் அப்டேட்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சஞ்சய் இயக்கும் படம் குறித்த அப்டேட் வெளியானது. ஆனால் அதன் பிறகு இப்படம் தொடர்பான எந்த ஒரு அறிவும் வெளியாகாமல் இருந்த நிலையில் படம் டிராப் ஆக்கிவிட்டது என்று கூறி வந்தார்கள். அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு சஞ்சய் இயக்கும் புதிய திரைப்படம் குறித்து அப்டேட் வெளியானது. இப்படத்தில் சந்திப் கிஷன் ஹீரோவாக நடிக்கின்றார், தமன் இசையமைக்கின்றார். இது தொடர்பான மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்தது.
அந்தணன் பேட்டி:
இயக்குனராக அறிமுகமாக இருக்கும் சஞ்சய் தனது முதல் படத்தில் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வந்தது. இந்த தகவலுக்கு சினிமா விமர்சகர் அந்தணன் விளக்கம் அளித்து இருக்கின்றார். தனியார் youtube சேனலுக்கு பேட்டியளித்த அந்தணன் கூறியிருந்ததாவது 'தனது தந்தையின் ஆதரவு இல்லாமல் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்யும் சஞ்சய்க்கு லைக்கா நிறுவனம் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறது.
அது தவிர அவருக்கு 10 கோடி சம்பளம் என்பதெல்லாம் யாரோ கிளப்பி விட்டது. இதை யார் கிளப்பி விட்டார்களோ, அவர்கள் கதை எழுத வந்தால் நல்ல திரைக்கதை அமைப்பார்கள். கொஞ்சம் கூட அறிவே இல்லை. முதல் படத்திற்கு யாராவது இத்தனை கோடி சம்பளம் கேட்பார்களா? தன்னை நிரூபித்த பிறகு சம்பளம் தொடர்பான விஷயத்தில் முடிவெடுப்பது தான் சரியாக இருக்கும். அதனால் சஞ்சய்க்கு பத்து கோடி சம்பளம் என்பதெல்லாம் சுத்த கட்டுக்கதை' என்று சரமாரியாக விளாசி இருக்கின்றார் அந்தணன்.