படத்துல சிம்புக்கு பேர் இல்லையா? ரெண்டு பேர் இருக்கு.. போட்டுடைத்த கமல்
thuglife
கமல் மணிரத்னம் காம்போவில் வெளியாக கூடிய திரைப்படம் தக் லைஃப். ஜூன் 5ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இசை ஏ ஆர் ரகுமான். படத்தின் டிரைலர் போஸ்டர் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதன் பிறகு படத்தை புரோமோட் செய்யும் வகையில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளார்கள். பல youtube சேனல்களுக்கு படக்குழு தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். நாயகன் படத்திற்கு பிறகு கமல் மற்றும் மணிரத்னம் இந்த படத்தின் மூலம் இணைவதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
நாயகன் மாதிரி இருக்காது. ஆனாலும் நாயகன் படத்தை பீட் செய்யும் அளவில் இந்த படம் இருக்கும் என கமல் தெரிவித்திருக்கிறார். சிம்பு இந்த படத்தில் கமலுக்கு இணையான ஒரு ரோலை கையாண்டு இருக்கிறார். அதனால் சிம்பு ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்த படத்திற்குப் பிறகு சிம்புவை தமிழ் சினிமா தலையில் வைத்து கொண்டாடும் என்றே நாம் கூறலாம்..
இந்த நிலையில் திரிஷா படத்தில் நடித்ததை பற்றி கூறும் போது டிரெய்லருக்கு பிறகு ரசிகர்கள் பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டனர். அதில் எல்லாரும் ஓ சிம்புவுக்கு பேர்-அ இருப்பீங்கனு பார்த்தோம். கமலுக்கு பேர்-ஆ இருக்கீங்களா என நிறைய பேர் கூறியிருந்தனர். இதை நாங்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. என்ன மாதிரியான கேரக்டர் என கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என கூறினார்.
இதை கேட்டுக் கொண்டிருந்த கமல் உடனே ‘சிம்புவுக்கு பேர் இல்லைனு யார் சொன்னா? ரெண்டு பேர் இருக்கு. அமரன் என்ற பேரும் சக்திவேல் நாயக்கர் என்ற பேரும் இருக்கிறது. போதாதா’ என கிண்டலாக கூற அனைவருமே சிரித்துவிட்டனர். கமல் மற்றும் திரிஷா மூன்றாவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.