ரஜினி செய்த கேரக்டர்ல நீங்க நடிக்கணும்னா எதைத் தேர்ந்தெடுப்பீங்க? கமலின் நெத்தியடி பதில்
கமல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடிக்கக்கூடியவர். ஒரே படத்திலும் அசத்தலாக பல வேடங்களில் நடித்து வேரியஸ் வெரைட்டி காட்டுவதில் கில்லாடி.
அந்த வகையில் ரஜினியும், கமலும் இணைபிரியா நண்பர்கள். இருவருக்கும் திரையுலகில் மட்டுமே ஆரோக்கியமான போட்டி. இருவரும் தனித்தனியாக படங்கள் வரும்போது பரஸ்பரம் ரசித்துப் பாராட்டிக் கொள்வார்கள். அந்த வகையில் ஆருயிர் நண்பர்கள் என்றே சொல்லலாம்.
அப்படி இருக்க ரஜினி நடித்த எந்தக் கேரக்டர்ல நீங்க நடிக்க ஆசைப்படுறீங்கன்னு தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கமலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.
எனக்கு ஒரு நல்ல சம்பவம் ஞாபகத்துக்கு வருது. நான் ஏன் பிறந்தேன் படத்துல மக்கள் திலகம் பண்ணிக்கிட்டு இருக்காரு. மேக மூட்டமா இருக்கு. மத்தவங்க எல்லாம் வேற ஒரு லொகேஷன் பார்க்கப் போயிருக்காங்க. சில திறமைகளை ஜோக் சொல்வாங்க. புலியூர் சரோஜா இருந்தாங்கன்னா அவங்க ஜோக் சொல்வாங்க. குலுங்கி குலுங்கி சிரிப்பாரு மக்கள் திலகம்.
அவரு சிரிக்கிறதைப் பார்க்கணும்கறதுக்காக ஒண்ணு ஒண்ணா பண்ணிக் காட்டுவோம். ஆடத் தெரிஞ்சவங்க ஆடுவாங்க. பல்டி அடிக்கத் தெரிஞ்சவங்க பல்டி அடிப்பாங்க. அவரு வர்றதுக்கு முன்னாடி நான் ஏதோ அவரைப் பத்திக் கிண்டல் அடிச்சிட்டேன். போட்டுக் கொடுத்துட்டாங்க. நான் ஏன் பிறந்தேன் பாட்டு.
அதை அப்படியே நடிகர் திலகம் மாதிரி மக்கள் திலகத்துக்குப் பண்ணிக் காட்டுனேன். தலையை சற்றே ஆட்டிவிட்டு விரலைக் காட்டி என்னை அழைத்தார். இதை நான் பண்ணினா நல்லாருக்குமான்னு கேட்டார்.
அந்த அறிவுரை தான் இப்போ. அவங்க அவங்களுக்குன்னு ஒண்ணு இருக்கு. அதை அவங்க பண்ணினாதான் நல்லாருக்கும். நாங்க பண்ணும்போது ஒரு மிமிக்ரியா கூட இருக்கும். இன்னும் சிலர் கேலி பண்றதா கூட தப்பா நினைச்சிக்குவாங்க ரசிகர்கள். அவர் நினைக்க மாட்டாரு என்று பதிலடி கொடுத்து விட்டார் கமல்.