Thuglife: சினிமாவின் ஞானி மணிரத்னம்... நாசர், வையாபுரி பற்றி கமல் சொன்ன தகவல்

By :  SANKARAN
Published On 2025-06-04 16:15 IST   |   Updated On 2025-06-04 16:15:00 IST

 மணிரத்னம், கமல், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் காம்போவில் தக் லைஃப் படம் நாளை உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி இன்று நடந்த பிரஸ்மீட்டில் கமல் பேசியவற்றில் இருந்து சில கருத்துகளைப் பார்ப்போம்.

தக் லைஃப் படத்துக்கு வந்தவங்க எல்லாருமே கத்துக்கிட்டு வந்தவங்கதான். டெக்னீஷியன்களாக இருக்கட்டும். நடிகர்களாக இருக்கட்டும். அவங்க கூட ஒர்க் பண்ணும்போது அவங்க முகத்துல இருக்குற சந்தோஷம் யூனிட்டுக்கே தொற்றியது. அதை உங்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை.


இந்தப் படத்தில் சின்னப் பையனை நடிக்கும்போது அதை எடுப்பதற்கும் 50 பேர் வேலை செஞ்சாங்க. இந்தப் படத்துல காரைப் புரட்டிப் போட்டு, தமிழ்சினிமாவையும் புரட்டி போடணும்கறதுதான் எங்களின் ரொம்ப நாள் ஆசை. அதை செய்ய முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கோம். எல்லா நேரமும் அதைச் செய்ய முடியாது.

புரட்டிப் போடுறதுங்கறது பெரிய விஷயம். கொஞ்சமாவது நகர்த்தலாம். நாங்க விரும்பும் திசை நோக்கி. எங்களுக்குக் கிடைச்ச படை வீரர்கள் நிறைந்த படை. இன்டர்நேஷனல் லெவலில் டெக்னீஷியன்களின் வேலை இருக்கும். இங்குள்ள டெக்னீஷியன்களின் வேலையைப் பார்த்து வெளிநாட்டவரே வியக்கிறார்கள்.

மணிரத்னம் பிலிம் என்பது 40 வருஷத்துக்கு முன்பே அவர் நிரூபித்து விட்டார். நாசருக்கு நாயகன் படத்தில் நடிக்கும்போது எப்படி இருந்ததோ அதே போலவே எனக்கும் இப்போது மணிசார் படத்தில் நடிக்கும்போது இருந்தது. நான் பார்த்த அந்த இளைஞர் மணி சினிமாவின் ஞானியாகவே மாறி இருக்கிறார்.


அவர்கூட வேலை செய்வது எனக்கு குதூகலமாகவே இருக்கிறது. அது எல்லாருக்கும் தெரியும். படம் பார்க்கும்போது தெரியும். வையாபுரியை ஜூனியர் ஆர்டிஸ்டா இருக்கும்போதே நாங்கள் கண்டெடுத்தோம். மருதநாயகம் படத்தில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் எங்களுடன் இணைந்தார். அதைப் பாதியிலேயே விட்டுட்டோம் என்கிற வருத்தம் உண்டு. ஆனால் அதில் இருந்ததை விட இன்னும் சிறந்த அனுபவத்துடன் இதில் பணியாற்றியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News