படமே ரிலீஸாகல... ஆனா பேன் இண்டியா ரெக்கார்டாம்..! கங்குவா தயாரிப்பாளரின் கனவு பலிக்குமா?

கங்குவா இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது...

By :  sankaran
Update: 2024-10-27 02:37 GMT

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் கங்குவா. சூர்யா முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வித்தியாசமாக மிரட்டி இருக்கிறார். பாபி தியோல் வில்லனாக வருகிறார்.

இந்தப் படம் 38 மொழிகளில் வருகிறது. முதற்கட்டமாக 10 மொழிகளில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

இந்தப் படம் 2000 கோடி வசூல் செய்யும் முதல் படம் என ஞானவேல் ராஜா தெரிவித்து இருந்தார். அதைப் பற்றி பத்திரிகையாளர்கள் சூர்யாவிடம் கேள்வி எழுப்பினர். பெரிய கனவு கண்டால் என்ன குற்றம்? நானும் அவரது எண்ணத்தை நம்புகிறேன். நடந்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று பட்டும் படாமலும் பேசிவிட்டார்.


படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா பேசும்போது அஜீத் சாரின் நம்பிக்கை தான் எனக்கு பலத்தைத் தந்தது என்று தெரிவித்துள்ளார்.

நேற்று கங்குவா படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும் போது அதீத நம்பிக்கையுடன் பேசினார். அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க.

\';[pஎல்லாரு கையிலும் பாஸ் இருக்கும்னு நினைக்கிறேன். டிசம்பர் மாசம் இதே இடத்துல சக்சஸ் மீட் நடக்கும். அதுக்கான தேதியை நான் அறிவிப்பேன். உலகம் முழுவதும் உள்ள எல்லா விநியோகஸ்தரையும் கூப்பிட்டு பேன் இண்டியா ரெக்கார்டோட இந்த சக்சஸ் மீட் நடக்கும். அதனால எல்லாரும் இந்த பாஸை அப்படியே கையில வச்சிக்கோங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயம் தான். அதே நேரம் வேட்டையன் படம் 1000 கோடியைத் தாண்டும்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா அதே நேரத்துல அதோட வசூல் ரொம்பவே கேள்விக்குரியதாகி விட்டது. அது மாதிரி ஆகிவிடக் கூடாது. 

Tags:    

Similar News